கேதார்நாத் கோவில் மே 9 ஆம் தேதி திறக்கப் படுகிறது!

Published:

kedarnath yatra - 2026

டேராடூன் : உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் வரும் மே  மாதம் 9 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. இந்த வருடத்துக்கான நடை திறப்பு மே 9 ஆம் தேதி என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலை பகுதியில் மிகவும் புகழ்பெற்ற தலமாகத் திகழ்கிறது கேதார்நாத் சிவன் கோவில்! ஜோதிர்லிங்கத் தலங்களில் தலையாய தலமாகத் திகழும் இந்தக் கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்தக் கோவில் நடை கடும் குளிர் காலம் தவிர மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும்.

தற்போது குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில் கேதார்நாத் கோவில் நடை வரும் மே மாதம் 9 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img