திஷா கொலை குற்றவாளி சென்னகேசவலுவின் மனைவி குறித்த பரபரப்பான பின்னணி!

இந்தியா கிரைம் நியூஸ் லைஃப் ஸ்டைல்
IMG 20191221 WA0030 - 2026

திசா பாலியல் வன்கொலை வழக்கு குற்றவாளி சென்னகேசவலுவின் மனைவி ரேணுகா பற்றி பரபரப்பு உண்மைகள்.

நாராயணபேட்டை மாவட்டம் மக்தல் மண்டலம் குடிகண்ட்ல கிராமத்தில் சிறுவர் சம்ரக்ஷண நிலைய ஊழியர் வெள்ளிக்கிழமை சென்று விசாரித்தார்.

குற்றவாளி சென்னகேசவலுவின் மனைவி படித்த பள்ளியில் நடத்திய விசாரணையில் அவள் வயது 13 ஆண்டுகள் 6 மாதங்கள் என்று தெரியவந்தது.

திசா வன்கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான சென்னகேசவலுவின் மனைவி மைனர் என்பதால் சென்ன கேசவலுவின் பெற்றோரோடு சைல்ட் வெல்ஃபேர் அதிகாரி உரையாடினார்.

IMG 20191221 WA0031 - 2026

ரேணுகா தற்போது 6 மாத கர்ப்பிணி. பெற்றோர் இல்லாததால் சிறு வயதிலிருந்தே சித்தப்பா மற்றும் தந்தைவழிப் பாட்டி வீட்டில் வளர்ந்தாள்.

சென்ன கேசவலுவை காதல் திருமணம் செய்து கொண்ட பின் புகுந்த வீட்டிற்கு வந்தாள்.

அவளுக்கு பதினெட்டு வயது வரும்வரை சைல்டு வெல்ஃபேர் பாலர் சதனில் பாதுகாப்பு அளிப்பதாக அதிகாரிகள் சென்னகேசவலுவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

அந்தப் பெண்ணுக்கு ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர். அவர்கள் தற்போது சித்தப்பா வீட்டில் வளர்ந்து வருகின்றனர்.

அவர்களையாவது பாலர் பாதுகாப்பு நிலையத்திற்கு அனுப்பும்படி அதிகாரிகள் சித்தப்பாவிடம் வினவினர்.

ரேணுகாவின் தங்கை தம்மிடம் தான் இருப்பாள் என்றும் வேண்டுமானால் தம்பியை பாலர் பாதுகாப்பு நிலையத்துக்கு அனுப்புகிறோம் என்றும் சித்தப்பா கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.