December 6, 2025, 12:40 PM
29 C
Chennai

அந்த ‘ஒரே ஒரு வார்த்தை’… ஓபிஎஸ்., மகனை தூக்கி வைத்துக் கொண்டாடும் பாஜக., எம்பி.,க்கள்!

ravindranath - 2025ஒரே ஒரு முழக்கத்தால் ஒட்டு மொத்த அவையையும் பலத்த கைத்தட்டலுக்கு உட்படுத்தி, தன் பக்கம் ஈர்த்துவிட்டார் ஓபிஎஸ்.,சின் மகன் ரவீந்த்ரநாத்.

17ஆவது மக்களவைக்கான எம்.பி.க்களின் பதவிப் பிரமாணம், மக்களவையில் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பி.,க்களும் அப்போது பதவியேற்றுக் கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழியில் உறுதிமொழி ஏற்று, உறுப்பினராகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதில், திமுக கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் பெரியார் வாழ்க, தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க என்று அவரவருக்குத் தக்க முழக்கங்களை எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தினர்.

இறுதியில் தமிழகத்தில் இருந்து தேர்வான அதிமுக.,வின் ஒரே எம்பி.,யான தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார், மற்ற தமிழக எம்பி.,க்களைப் போல் தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவை ஆரவாரமின்றி அமைதியாக இருந்தது. ஆனால் அதிமுக., என்பதால், எம்ஜிஆர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க என்று முழக்கமிட்டார். அப்போதும் அமைதியாக இருந்தது அவை. .ஆனால், இறுதியில், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என மிகவும் உறுதியுடன் சத்தமிட்டு முழங்கிய போது, அவை ஆர்ப்பரித்தது.

பாஜக எம்பி.,க்கள் அனைவரும் அவருக்கு பலத்த கரவொலி எழுப்பி, அவரைப் பாராட்டி மகிழ்ந்தார்கள். ரவீந்திரநாத் இப்போது அனைவராலும் கவனிக்கப் படும் நபர் ஆகிவிட்டார்.

ஆனால், அதிமுக., என்ற கட்சியே, அகில இந்திய அதிமுக., என்று தேசியத்தை முன்னிறுத்தி பெயர் சூடிக் கொண்ட கட்சிதான்! மேலும், ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தை முதன் முதலில் கொடுத்தவரும் ஒரு தமிழர்தான். அவர் பெயரே ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை என்பதுதான்!

தமிழகத்தின் தென்கோடிப் பகுதியான நாஞ்சில் மண்ணில் தோன்றிய செண்பகராமனின் ஜெய் ஹிந்த் முழக்கத்தைத்தான் பின்னாளில் வங்கத்துச் சிங்கம் சுபாஷ் பெற்றுக் கொண்டு, தம் இந்திய தேசிய ராணுவத்தின் முழக்கம் ஆக்கினார். அவருடன் தொடர்பு கொண்டு தமிழகத்தில் தீவிரப் பணி ஆற்றிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஜெய் ஹிந்த் முழக்கத்தை பரவலாக்கினார்.

தேவரின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தைக்காவதுசுபாஷ் என்றும் போஸ் என்றும் பெயர் சூட்டுவதும், ஜெய் ஹிந்த் என்று சொல்லிக் கொடுப்பதும் இன்றளவும் மரபாக இருந்து வருகிறது. எனவே ரவீந்திரநாத் முழக்கத்தில் எந்த வித ஆச்சரியமோ, கூடுதல் கவனிப்போ உள்நோக்கமோ இருக்க வாய்ப்பில்லை!

ஆனால் அவரது இயல்பு கோஷம் இன்று தமிழகத்தின் தனித்துவத்தை தேசிய அரங்கில் உயர்த்தியிருக்கிறது! இந்த நாட்டுக்கே தேசிய எண்ணத்தையும் முழக்கங்களையும் கொடுத்த புனித மண் இந்தத் தமிழ் மண் என்பதை நிறுவியிருக்கிறார் ரவீந்திரநாத்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories