தமிழக அரசு துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து அரசு ஊழியர்களும் காலை 10 மணிக்கு அலுவலகங்களுக்கு வந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று அனைத்து துறை செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது: தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களும் பணி நாட்களில் காலை 10 மணிக்கு கண்டிப்பாக தங்களது அலுவலகங்களில் இருக்க வேண்டும். இந்த உத்தரவு அந்தந்த செயலாளர்களின் கீழ் பணியாற்றும் இதர பணியாளர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



