ரஃபேல் ஆவணங்கள் அமைச்சகத்தில் இருந்து திருட்டுத்தனமாக நகலெடுப்பு! பின்னணியில் ப.சிதம்பரம்?

Published:

14 June11 P Chidambaram - 2026

ரஃபேல் விமானங்கள் குறித்த சர்ச்சைகள் எவ்வளவுக்கு எவ்வளவு ராகுலால் மோசமான நிலையை அடைந்திருக்கிறதோ அவ்வளவுக்கு மோசமான நிலையினை ஆவணத் திருட்டு விவகாரமும் அடைந்திருக்கிறது.

ரஃபேல் ஆவணங்கள் களவாடப் பட்டதாக ஒரு குறிப்பை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அளித்தார். அதை அடுத்து அதன் மீதான விமர்சனங்கள் அரசியல் ரீதியாக பலமாக எழுந்தன.

ஒரு ஆவணத்தைக் கூடப் பாதுகாக்கத் துப்பில்லாத அரசாங்கம் மக்களைப் பாதுகாக்கப் போகிறதா என்று ஸ்டாலின் கூட கேள்வி எழுப்பும் அளவுக்கு இந்தப் பிரச்னையை சிக்கலாக்கினார்கள். ஆனால், இதற்குக் காரணமாக அமைந்தது ‘தி ஹிந்து’ நாளிதழில் அண்மையில் வெளியான ஒரு கட்டுரைதான்.

ஆனால் அந்தக் கட்டுரை எத்தகைய பொய்களைச் சுமந்துள்ளது என்று கூறி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரும் விளக்கத்தையே கொடுக்க வேண்டிய நிலைக்குப் போனது இந்த விவகாரம். இதன் மூல காரணம், அந்த ஆவணம்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இந்த ஆவணத் திருட்டு குறித்து கருத்து வெளியிட்ட ‘தி ஹிந்து’ ஆசிரியர் ராம், தாம் தனக்கு இந்த ஆவணங்களைக் கொடுத்தவர்களை காட்டிக் கொடுக்க மாட்டோம் என்றும் பாதுகாப்போம் என்றும் கூறியிருக்கிறார்.

இதனிடையே, இந்த ஆவணத்தை சுஹாசினி ஹைதர் நகலெடுத்து தி ஹிந்துவுக்குக் கொடுத்திருக்கலாம் என்று யூகங்களை சிலர் கிளப்பி விட்டனர். ஆனால், அவர் இல்லை… இதன் பின்னணியில் தானே உள்ளது போன்ற பிரமையை, ப.சிதம்பரம் சொல்லாமல் சொல்லி சில கருத்துகளை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.  இதனால் பாதுகாப்பு அமைச்சகத்தில் ப.சிதம்பரத்துக்கு உள்ள செல்வாக்கு குறித்தும், அவரது கையாள்கள் யார் என்றும், இந்த ஆவணங்களை நகலெடுத்துக் கொடுக்க உதவிய கறுப்பு ஆடு யார் என்றும், கேள்விகள் எழுந்துள்ளன.

ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துகளில், ரஃபேல் விவகாரத்தில் கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டதாகக் கூறியது. ஆனால், வெள்ளிக்கிழமையன்று நகல் எடுக்கப்பட்ட ஆவணங்கள் என்று தெரிவித்துள்ளது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

ஒருவேளை அந்த ஆவணங்களைத் திருடிய திருடன் வியாழக்கிழமை திருப்பிக் கொடுத்துவிட்டானோ?

ரஃபேல் குறித்து செய்தி வெளியிட்ட ஆங்கில நாளேட்டுக்கு ரகசிய ஆவணங்கள் பாதுகாப்புச் சட்டம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது! வெள்ளிக்கிழமை சமாதானமாகப் போவது குறித்து சைகை அளிக்கப்பட்டுள்ளது. காமன்சென்ஸுக்கு ஒரு சல்யூட்! – என்று தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img