நடப்பு நிதியாண்டுக்கான வங்கி கணக்குகள் முடிவடைவதால் இன்று அனைத்து வங்கிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படமாட்டாது. அரசு துறைகளின் கருவூலங்கள் சார்பில் பணம் செலுத்துதல், எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் நடைபெறும். கருவூல கணக்குகளை சரிபார்த்தல், காசோலை, வரைவு காசோலை மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மட்டும் நடைபெறும். பொது மக்கள் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அரசு துறைகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள் மட்டும் செலுத்தலாம். மேலும் ஏப்ரல் 1-ந்தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன.




