கை கொடுத்தாய்ங்க… வைர மோதிரம் அபேஸ்… அதிர்ச்சியில் இருந்து மீளாத ஜெகன் சகோதரி!

இந்தியா சற்றுமுன்

ysr reddy sister ring - 2026

நூதன திருடர்கள், கட்சிக்காரர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்ற விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆந்திராவில் பிரச்சாரத்தின் போது #YSRCP காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா அணிந்திருந்த வைர மோதிரத்தை கை கொடுக்கும் சாக்கில் ஒருவர் கழற்றிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது பல்வேறு கட்சிகளும் தங்களது பிரசார உத்தியைக் கையாண்டு வெயில் காற்று பார்க்காமல் தங்கள் கட்சிக்கு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்

சாலை ஓரம் நிற்கின்ற மக்களுக்கு கையசைத்து கைநீட்டி கைகாட்டி பொது கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களிடம் உறவாடுவது போலும், உரையாடுவது போலும் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்

சிலர் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களோடு உணவருந்தி சமத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்!

இப்படித்தான் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சித் தலைவரான  ஓய்எஸ் ஷர்மிளா மங்களகிரியில் ஒரு சாலையோர பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி இவர்! அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகள் போலவும் கட்சிக்காரர்கள் போலவும் நின்று கொண்டிருந்த யாரோ ஒரு திருடன் ஷர்மிளாவுக்கு கை கொடுப்பது போல் கை கொடுத்து நைசாக அவர் அணிந்திருந்த வைர மோதிரத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்

இந்தச் சம்பவம் வீடியோவில் பதிவாகி இப்போது வைரலாகி வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.