சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Published:

chennai super kings - 2026

சென்னையில் இன்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வெற்றி கொண்டது

முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அம்பத்தி ராயுடு ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார் ஷேன் வாட்சன் 13 ரன்கள் எடுத்தார்

சுரேஷ் ரெய்னா 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். கேதர் ஜாதவ் மூன்று பந்தில் 8 ரன் எடுத்தார்! நடுவரிசையில் விளையாடிய கேப்டன் தல தோனி 46 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடித்து 75 ரன் எடுத்தார். அவருடன் பிராவோ 16 பந்தில் 27 ரன் குவித்தார்

கடைசியில் ரவீந்திர ஜடேஜா மூன்று பந்தில் 8 ரன் எடுக்க சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது

176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் துவக்க ஆட்டக்காரர் அஜிங்கியா ரஹானே டக் அவுட்டானார். பட்லர் ஆறு சஞ்சு சாம்சன் எட்டு ரன் எடுத்தனர்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

இதனால் அந்த அணி தடுமாறியது இருப்பினும் ராகுல் திரிபாதி 39 ரன்னும் ஸ்டீவன் ஸ்மித் 28 ரன்னும் பென் ஸ்டோக்ஸ் 46 ரன்னும் எடுத்து அந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்

இருப்பினும் ஆச்சர் 24 ரன்னும் அடுத்து வந்த இருவர் ரன் ஏதும் எடுக்காமலும் இருக்க அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 8 ரன்களில் சென்னை அணியிடம் தனது வெற்றியை பறிகொடுத்தது ராஜஸ்தான் அணி

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img