எமிசாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது பிஎஸ்எல்வி சி 45.
29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்விசி 45 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதுகுறித்து திருப்பதி சாமி தரிசனம் செய்த பின்னர் பேசிய இஸ்ரோ விண்வெளி ஆய்வு மைய அறிவியல் செயலாளர் உமா மகேஸ்வரன், ராணுவ உளவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் 436 கிலோ எடை கொண்ட ‘எமிசாட்’ செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கான இறுதி கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
எமிசாட் செயற்கை கோளுடன் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 29 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.
3 வெவ்வேறு சுற்று வட்ட பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தும் இந்த ராக்கெட், இஸ்ரோ தலைவர் சிவனின் கனவு திட்டமான உலகில் முதன்முறையாக 4வது கட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
இதற்காக பிஎஸ் 4 இயந்திரம் இறுதிநிலையில் செல்லும் விதமாக சோலார் பேனல் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஒரே ராக்கெட்டில் மூன்று விதமான வட்டப் பாதையில் நிலை நிறுத்தும் செயற்கைக்கோள்களை செலுத்துவது இந்தியாவில் இதுதான் முதல் முறை.
இந்நிலையில், 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்விசி 45 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்விசி 45 ராக்கெட்டை நேரில் பார்க்க 1000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



