டெல்லியில் நாளை வெளியிடப்படுகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

இந்தியா சற்றுமுன்

rahul gandhi 24 - 2026

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்போவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ள நிலையில், அதை காங்கிரஸ் கூட்டணி பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், நாளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகிறது. டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட உள்ளார். அந்த அறிக்கையில், 72 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு உட்பட ஏராளமான சலுகை வாக்குறுதிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.