INT & SPORTS NEWS FOR 10 AM 11th May 2018 
கர்நாடகாவில் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ., உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று பிரசாரம் முடிவடைந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர், பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றில் நடந்த சோதனையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப் பட்டன.
கர்நாடகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், காங்கிரஸின் கரம் இருப்பதாக பாஜக.,வும், பாஜக.,வில் இருந்தவர்தான் இவ்வாறு செய்துள்ளார் என காங்கிரஸும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொண்டன. இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வந்த ஜலஹள்ளி போலீசார், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. முனிரத்னா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ., முனிரத்னா மற்றும், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட மேலும் 13 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



