சுப்பிரமணிய சுவாமியுடன் எனக்கு மோதல் போக்கு எதுவும் இல்லை என்று தனது டிவிட்டர் பதிவில் தெளிவாக்கியுள்ளார் பத்திரிகையாளரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி.
சுப்பிரமணிய சுவாமி தனது டிவிட்டர் பதிவுகளில் எஸ்.குருமூர்த்தி குறித்து குறிப்பிடும் போது, மயிலாப்பூர் அறிவுஜீவி என்று பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாகக் குறிப்பிடுவார். எஸ்.குருமூர்த்தியின் தமிழக அரசு இணக்க செயல்பாடுகள், சசிகலா, டிடிவி தினகரன் எதிர்ப்பு நிலைப்பாடுகள் உள்ளிட்டவற்றை சு.சுவாமி விமர்சனம் செய்து வருவார்.
இந்நிலையில் அண்மைக் காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்திருப்பது போல், வார்த்தைகளால் தாக்கிக் கொள்ளும் போக்கினை பலரும் உணர்ந்தார்கள். இது குறித்து ஒருவர் எழுப்பிய கேள்விக்கு டிவிட்டரில் பதில் அளித்துள்ளார் எஸ்.குருமூர்த்தி.
அதில் அவர், நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் சுவாமியுடன் எந்த நேரத்திலுமே மோதல் போக்கைக் கடைப்பிடித்ததில்லை. அவர் எனக்கு மூத்தவர். அவர் தேசியத்துக்காக மிகச் சிறந்த பணிகளை செய்து வருகிறார். என்னால் எந்த வகைகளில் எல்லாம் முடியுமோ அவற்றில் எல்லாம் அவருக்கு நான் ஆதரவாக இருப்பேன். ஒரு மூத்த நபராக, என் மீது என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ அதை வெளிப்படுத்தும் சுதந்திரம் அவருக்கு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் எஸ்.குருமூர்த்தி.
You have misunderstood. I never clash with Swamy. He is my elder. He is doing a fantastic job by the national. I am here to support him whatever way I can. As an elder he has the liberty to say whatever he wants about me. https://t.co/09P5Di92sk
— S Gurumurthy (@sgurumurthy) May 10, 2018




