இன்று தமிழகம் வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா

இந்தியா சற்றுமுன்

amit shah - 2026

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து சிவகங்கை மற்றும் கோவையிலும் பாஜக வேட்பாளர்கள் எச். ராஜா மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆதரவாக அமித் ஷா வாக்கு சேகரிக்க உள்ளார்.

தொடர்ந்து 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தமிழகம் வர உள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posts by ரேவ்ஸ்ரீ:

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =