பாஜக., உதய தினம்: பிரதமர் மோடி வாழ்த்து; தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

இந்தியா சற்றுமுன்

amith sha advani - 2026

பாஜக., வின் 39வது ஆண்டு உதய தினம் இன்று நாடு முழுதும் பாஜக., தொண்டர்களால் உற்சாகமாகக் கொண்டாடப் படுகிறது!

‘பிஜேபி., ஸ்தாபன திவஸ்’ கொண்டாடும் தொண்டர்களுக்கு பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

vajpayee advani fernandas - 2026

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், 39 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக பிறந்தது. இந்த நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதிலும் சமுதாயத்துக்கு சேவை மனப்பான்மையுடனும் உழைத்து வருகிறோம். இன்று பிஜேபி ஒரு பேரியக்கமாக நிற்கிறது. இதற்காக தங்கள் உழைப்பை அளித்து வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. கட்சி உதய நாளில் பாஜக., குடும்பத்தினருக்கு என் வாழ்த்துக்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில்…பாஜக., தொண்டர்கள் நமது கட்சியை ஒரு குடும்பமாகப் போற்றுகின்றனர். பல்வேறு தலைவர்களின் தியாகத்தினால் கட்சி பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த முக்கிய தருணத்தில் கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த உழைப்பு கட்சியையும், தேசத்தையும் காப்பாற்றும்… என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.