இந்தியாவின் நாயகனை எதிர்த்து… இந்திராவின் ‘மூக்கு’ தயார்!

இந்தியா சற்றுமுன்

indira priyankagandhis - 2026

பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டி இடுகிறார்.

வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா தயார் என, அவரது கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.

பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்தச் சூழலில், பிரியங்காவை களமிறக்க வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாகப் பேசிய பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, நரேந்திர மோடிக்கு எதிராக களமிறங்க, பிரியங்கா தயார் என்றார்.

பிரியங்கா காந்தி இதற்கு சம்மதித்து விட்டாலும், அவர் போட்டியிடுவது பற்றி கட்சித் தலைமை தான் முடிவெடுக்கும் என்றும் ராபர்ட் வதேரா கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.