தன் மீதே பாலியல் புகார்; நீதிதுறைக்கு ஆபத்து: தலைமை நீதிபதி வேதனை!

ranjan gogoi

நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை தெரிவித்துள்ளார்.  தம் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியது குறித்து ரஞ்சன் கோகாய் கருத்து தெரிவித்துள்ளர்.

பெண் ஊழியர் பாலியல் புகார்  தெரிவித்தது தொடர்பாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான தகவல்களை பரப்பும் பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த பாலியல் புகார் மிரட்டுவதற்காக கூறப்பட்டதாகத்தான் தெரிகிறது; இதை கடுமையாக கையாள வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா கருத்து தெரிவித்துள்ளார். மேலும்,

பாலியல் துன்புறுத்தல் சட்டப்படி பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிடக்கூடாது; ஆனால் இந்த விவகாரத்தில் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது என்று அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியுள்ளார். மேலும், அரசை ஆதரித்து வாதிடுவதே என் தொழில். ஆனால் அதற்காகவே என் மீது பலமுறை பழி சுமத்தப்பட்டுள்ளது என்று அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் இந்த விவகாரத்தில் கருத்து கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். தலைமை நீதிபதி மீது வைக்கப்பட்ட இந்த பாலியல் குற்றச்சாட்டு, நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்துள்ளார். நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. எனது பணிக்காலம் முடியும் வரை பயமின்றி செயல்படுவேன். அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை விசாரிக்க உள்ளதால் தன் மீது பாலியல் புகார் சுமத்தப்படுகிறது” என்றார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

3 COMMENTS

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.