3ம் கட்டத் தேர்தல்: தாயிடம் ஆசிபெற்று வாக்களித்தார் பிரதமர் மோடி!

Published:

modi vote2 - 2026

மக்களவைக்கு நடைபெறும் 3ம் கட்டத் தேர்தலில் இன்று தனது வாக்கைச் செலுத்தினார் பிரதமர் மோடி.

3ம் கட்ட மக்களவை தேர்தலில், குஜராத், காந்தி நகரில் உள்ள தனது தாயின் இல்லத்திற்கு வந்தார் பிரதமர் மோடி. அவரது தாயிடம் வணங்கி, ஆசி பெற்றார் பிரதமர் மோடி! தொடர்ந்து, அகமதாபாத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்..

அதேபோல், பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா, அகமதாபாத்தில் உள்ள நிஷான் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்

modi mother wish - 2026

குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் பாஜக., தலைவர் அமித் ஷா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்தத் தொகுதிக்குட்பட்ட ரானிப் பகுதியில் உள்ள பள்ளியில், பிரதமர் மோடி தனது வாக்கை செலுத்தினார்.

அமித்ஷா நாராண்புராவில் உள்ள சாவடியில் வாக்களித்தார். அத்வானி, கான்பூரில் உள்ள சாவடியில் வாக்களிக்கிறார்.

Related articles

Recent articles

spot_img