ஸ்ரீராம் பூர் என்ற இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்! அப்போது அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு பேசினார்…
எனக்கு ரசகுல்லாவை அனுப்ப விரும்பும் தீதீ மம்தா பானர்ஜி ரசகுல்லாவை மண் மற்றும் கூழாங்கற்களை வைத்து உருவாக்கி அதை அனுப்ப விரும்புவதாகக் கூறி இருந்தார்! மிகப்பெரும் ஆளுமைகளான ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ஜெகதீஸ் சந்திரபோஸ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சியாமா பிரசாத் முகர்ஜி ஆகிய பெரும் மேதைகளின் சாரத்தை தாங்கியது வங்கத்துப் புனித மண்.
மோடி ரசகுல்லாவைப் பெறும்போது குறிப்பாக இந்தப் புனித மண் நிறைந்த ரசகுல்லாக்களை மோடி பெறும்போது அதனை பிரசாதம் ஆகவே மோடி எடுத்துக் கொள்வார் என்று கூறினார்
முன்னதாக நடிகர் அக்ஷய் குமாருடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் பிரதமர் மோடி தனக்கு அரசியல் பின்புலத்தைக் கடந்தும் நட்புகள் அதிகம் உண்டு … எடுத்துக்காட்டாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருடந்தோறும் எனக்கு ரசகுல்லா மற்றும் குர்தாக்களை அனுப்புவார் என்று கூறியிருந்தார்!
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி நான் மோடிக்கு கூழாங்கற்களும் சகதியும் கொண்டதாக ரசகுல்லாக்களை அனுப்புவேன்! அதைக் கடித்து மோடியின் பற்கள் உடையட்டும் என்று சாபம் கொடுக்கும் விதத்தில் பேசினார்
இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது! இந்நேரத்தில் மோடி மண்ணின் மகிமையை எடுத்துக் கூறும் விதமாக பதிலளித்து மீண்டும் மமதா பானர்ஜியை சீண்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
PM Modi in Sreerampur: Didi said she wants to give me rasgulla made of soil & pebbles.Soil of Bengal has essence of greats like Ramakrishna Paramhansa,Swami Vivekananda,JC Bose,Netaji,SP Mukherjee & if Modi gets rasgulla made of this holy soil then it will be a ‘prasad’ for Modi pic.twitter.com/QOLSc0tahP
— ANI (@ANI) April 29, 2019




