இலங்கையை அடுத்து இந்தியாவில் மிகப் பெரும் தாக்குதல் நடத்த திட்டம்! உளவுத்துறை உஷார்!

Published:

kashmir5 - 2026
இலங்கையில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு நிகழ்த்திய தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நேரத்தில், இந்தியாவிலும் அது போன்ற தாக்குதல்களை நிகழ்த்த பயங்கரவாதிகள் திட்டம் இட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் இது தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஐ.எஸ்., அமைப்பு மற்றும் ஜெய்ஷ் இ மொஹம்மது ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர் என்று உளவுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அமைப்புகள், இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ., இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாம். அண்மையில், காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நிகழ்த்திய தாக்குதலைப் போல் நடத்தி இந்தியாவை உசுப்பேற்ற இந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

Related articles

Recent articles

spot_img