புதுதில்லி: தில்லியில், 10 வருடங்கள் பயன்பாடு கண்ட பழைய டீசல் வாகனங்கள் மீதான தடையை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைத்தது பசுமைத் தீர்ப்பாயம். காற்றில் பரவும் மாசு, எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதால் பசுமைத் தீர்ப்பாயம் இந்த முடிவை எடுத்தது. நாட்டின் தலைநகர் தில்லியில் 10 வருடங்கள் சாலையில் ஓடி பயன்பாடு கண்ட பழைய டீசல் வாகனங்களைத் தடை செய்து உத்தரவிட்ட தனது தீர்ப்பை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இரு வாரங்களுக்கு அதை ஒத்திவைத்துள்ளது. 10 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்களுக்கு பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தவுடன், தில்லி மாநில அரசு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் டீசலை பயன்படுத்தி இயங்கும் தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ் மற்றும் சிறை வாகனங்களுக்கு மட்டும் 10 வருட கால தடையை நீக்கவேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தீர்ப்பாய விசாரணைக்கு பின் தங்கள் தீர்ப்பை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
பழைய டீசல் வாகனங்களுக்கான தடை: இரு வாரங்களுக்கு நிறுத்திவைத்தது பசுமைத் தீர்ப்பாயம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari