இன்று கர்நாடக சட்ட மேலவைத் தேர்தல்

19 June7 KN - 2026கர்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இன்று தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கர்நாடக சட்ட மேலவையில் கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர், கர்நாடக தெற்கு ஆசிரியர், கர்நாடக தென்மேற்கு ஆசிரியர், கர்நாடக தென்மேற்கு பட்டதாரி, பெங்களூரு பட்டதாரி, கர்நாடக வடகிழக்கு பட்டதாரி தொகுதிகளை முறையே பிரதிநிதித்துவப்படுத்தும் ரமேஷ்பாபு (மஜத), மரிதிப்பேகெளடா(மஜத), கணேஷ் கார்னிக்(பாஜக, டி.எச்.சங்கரமூர்த்தி(பாஜக), ராமசந்திரகெளடா(பாஜக), அமர்நாத்பாட்டீல்(பாஜக)ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 21-ஆம் தேதி நிறைவுபெறுகிறது.

இதையடுத்து, காலியாகவுள்ள 6 இடங்களுக்கு ஜூன் 8-ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

டி.எச்.சங்கரமூர்த்தி, ராமசந்திர கெளடா ஆகிய இரு மூத்த தலைவர்களும் கடந்த 30 ஆண்டுகளாக சட்ட மேலவை உறுப்பினர்களாக பதவி வகித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேர்தலில் நிற்கும் வாய்ப்பு பாஜகவால் மீண்டும் வழங்கப்படவில்லை.

கர்நாடக சட்ட மேலவையில் கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர், கர்நாடக தெற்கு ஆசிரியர், கர்நாடக தென்மேற்கு ஆசிரியர், கர்நாடக தென்மேற்கு பட்டதாரி, பெங்களூரு பட்டதாரி, கர்நாடக வடகிழக்கு பட்டதாரி தொகுதிகளை முறையே பிரதிநிதித்துவப்படுத்தும் ரமேஷ்பாபு (மஜத), மரிதிப்பேகெளடா(மஜத), கணேஷ் கார்னிக்(பாஜக, டி.எச்.சங்கரமூர்த்தி(பாஜக), ராமசந்திரகெளடா(பாஜக), அமர்நாத்பாட்டீல்(பாஜக)ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 21-ஆம் தேதி நிறைவுபெறுகிறது

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

கர்நாடக வடகிழக்கு பட்டதாரி தொகுதியில் பீதர், கலபுர்கி, யாதகிரி, ராய்ச்சூரு, கொப்பள், பெல்லாரி மாவட்டங்கள், கர்நாடக தென்மேற்கு பட்டதாரி தொகுதியில் சிவமொக்கா, தாவணகெரே, தென்கன்னடம், உடுப்பி, சிக்மகளூரு, குடகு மாவட்டங்கள், பெங்களூரு பட்டதாரி தொகுதியில் பெங்களூரு, பெங்களூரு ஊரகம், ராமநகரம் மாவட்டங்கள், கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர் தொகுதியில் சித்ரதுர்கா, தும்கூரு, கோலார், சிக்பளாப்பூர் மாவட்டங்கள், கர்நாடக தென்மேற்கு ஆசிரியர் தொகுதியில் சிவமொக்கா, தாவணகெரே, தென்கன்னடம், உடுப்பி, சிக்மகளூரு, குடகு மாவட்டங்கள், கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதியில் மைசூரு, சாமராஜ்நகர், மண்டியா, ஹாசன் மாவட்டங்களின் வாக்காளர்கள் உள்ளனர்.

பெங்களூரு பட்டதாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராமோஜிகெளடா, பாஜக வேட்பாளராக ஏ.தேவெகெளடா, மஜத வேட்பாளராக அச்சேகெளடாசிவண்ணா உள்பட 22 வேட்பாளர்கள்; கர்நாடக வடகிழக்கு பட்டதாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சந்திரசேகர் பாட்டீல், பாஜக வேட்பாளராக கே.பி.சீனிவாஸ், மஜத வேட்பாளராக என்.பிரதாப்ரெட்டி, கன்னட சலுவளிக் கட்சி வேட்பாளராக வாட்டாள் நாகராஜ் உள்பட 10 வேட்பாளர்கள்; கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக எம்.ராமப்பா, பாஜக வேட்பாளராக ஒய்.ஏ.நாராயணசாமி, மஜத வேட்பாளராக ரமேஷ்பாபு உள்பட 14 வேட்பாளர்கள்; கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக எம்.லட்சுமணா, பாஜக வேட்பாளராக பி.நிரஞ்சன்மூர்த்தி, மஜத வேட்பாளராக மரிதிப்பேகெளடா உள்பட 9 வேட்பாளர்கள்; கர்நாடக தென்மேற்கு ஆசிரியர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கே.கே.மஞ்சுநாத்குமார், பாஜக வேட்பாளராக கேப்டன் கணேஷ் கார்னிக், மஜத வேட்பாளராக எஸ்.எல்.போஜேகெளடா உள்பட 12 வேட்பாளர்கள்; கர்நாடக தென்மேற்கு பட்டதாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக எஸ்.பி.தினேஷ், பாஜக வேட்பாளராக ஆயனூர் மஞ்சுநாத், மஜத வேட்பாளராக அருணாகுமார் உள்பட 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. வரும் 12-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories