பிரதமருக்கு கொலை மிரட்டல்! நடவடிக்கை எடுக்க இந்திய தூதரகம் கனடாவிற்கு கடிதம்!

Published:

pmmodi
pmmodi

கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடுவது போல கனடாவிலும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரும் போராடி வருகின்றனர்.

இதனால் பல இடங்களில் கலவரங்களும் போராட்டங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இந்திய தூதரகம் மற்றும் நான்கூவரில் உள்ள துணை தூதரகத்தின் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

ஆகையால் இது தொடர்பாக கனடா போலீசிடம் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து வான்கூவர் துணைத் தூதரகத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளரான இந்தர்ஜித் சிங் பெயின்ஸ் என்பவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

அது மட்டுமின்றி முகநூல் பக்கத்திலும் இது தொடர்பாக பதிவு செய்திருந்தார். இது தொடர்பாகவும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததால், கனடா வெளியுறவு துறை அமைச்சர் மார்க் கார்னியு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயங்கொண்டம் தொலைபேசியில் அழைத்தார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

அதன்பிறகு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த முறைகேடான விவகாரத்தில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதில், ஒட்டாவா மற்றும் வான் சுவரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு, இந்திய தூதரகம் கடிதம் எழுதியுள்ளது.

Related articles

Recent articles

spot_img