ஆஹா… ட்ரெண்ட் ஆக்கிட்டாங்களேய்யா… #RajivGandhiChorHai

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

rajiv gandhi chor - 2026

இன்று டிவிட்டர் பதிவுகளில் டிரெண்ட் ஆக்கப் பட்டுள்ளது ராஜிவ் காந்தி திருடன் #RajivGandhiChorHai எனும் ஹேஷ்டாக்.

தேசத்தின் பிரதம மந்திரி அல்ல, நான் தேசத்தின் பிரதான சேவகன் என்று கூறி வந்தார் பிரதமர் மோடி. தொடர்ந்து, தான் தேசத்தின் காவலாளி என்று, சௌக்கிதார் என தன்னை அழைத்துக் கொண்டார்.

இந்நிலையில், ரபேல் போர் விமான விவகாரத்தில், மோடியை திருடன் என்று சொல்லி,  சௌக்கிதார் சோர் ஹை.. என்று, காவலாளி திருடன் என மோடியை வசைபாடி முழங்கி வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

அதற்கு பதிலடியாக, போபார்ஸ் ஊழல் முதல், நாட்டில் நடைபெற்ற ஊழல்களின் ஊற்றுக் கண்ணாக அப்போது இருந்த ராஜீவ் காந்தியை சுட்டிக் காட்டி பேசினார் மோடி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ராகுல். பிரியங்காவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காலமாகி விட்ட ஒருவர் குறித்து இப்போது ஏன் அரசியல் பேச வேண்டும் என்று விமர்சித்தார்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி ஒரு திருடன் என்ற வாசகம் சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. டிவிட்டர் பதிவுகளில் இன்று அதனை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.