
திருமங்கலத்தில் ஜல்லிக்கட்டு விழா நடந்தது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.
திருமங்கலத்தை அடுத்த கரடிக்கல்லில் மிக பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற சுந்தரராஜ பெருமாள் உள்ளது. அக்கோவிலின் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
இந்த ஜல்லிகட்டு போட்டியில் கோவை, தேனி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த 500க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அடக்கினர். மைதானத்தில் காளைகளும், காளையரும் சிலிர்த்தபடி மோதிய ஜல்லிக்கட்டு போட்டிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அரசு அதிகாரிகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவான முறையில் செய்திருந்தனர்.



