ராஜஸ்தான் மாநில எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் அண்டனாவ் ஏ.என்-12 ரக என்ற சரக்கு விமானம் அத்துமீறி பறந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த இந்திய விமானப்படை உடனடியாக அந்த விமானத்தின் விமானியை தொடர்பு கொண்டு ஜெய்ப்பூரில் தரையிறக்க செய்தனர். இது தொடர்பாக இந்திய விமானப்படை அதிகாரிகள் ஏ.என்-12 ரக சரக்கு விமானத்தை ஓட்டி வந்த விமானியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானால் உளவு பார்க்க அனுப்பட்டதா? அல்லது வழி தவறி இந்திய எல்லைக்கு வந்து விட்டதா? பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு சரக்கு விமானம் வந்தது ஏன்? என்ற கோணங்களிலும் விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



