ஒரு ரன்னில் கோப்பையை கோட்டை விட்ட சென்னை அணி

Published:

ipl csk - 2026

ஐபிஎல் போட்டிகளில் இறுதிப்போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது

இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது மும்பை அணி

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது

மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர் டிகாக் 29 ரன்களை எடுத்தார் ரோகித் சர்மா சூரியகுமார் ஆகியோர் தலா 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

மும்பை அணியில் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார் . பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 16 ரன்கள் எடுத்தார்

மற்ற வீரர்கள் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர் அதனால் மும்பை அணி 20 ஓவரில் 149 ரன் எடுத்து 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது

இதையடுத்து 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் துவக்க ஆட்டக்காரர் du plessis 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

சென்னை அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு சுரேஷ் ரெய்னா கேப்டன் தோனி மூவரும் இரட்டை இலக்கத்தை கடப்பதற்குள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை வெறுப்பேற்றினர்

அடுத்து பிராவோ 15 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடினார்

அவரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி இலக்குக்கு அருகே வர உறுதுணையாக இருந்தார்.
இன்னொரு முனையில் ஜடேஜா ரன் எடுக்க திணறினார்.

அடித்து ஆட வேண்டிய கடைசி ஓவரில் ரன் எடுக்க இயலாமல் ஜடேஜா திணறினார். மறுமுனையில் நன்கு ஆடிவந்த வாட்சன் பாண்டியாவால் ரன் அவுட் ஆனார் அவர் 80 ரன்கள் எடுத்தார்.

கடைசி இரண்டு பந்தில் நான்கு ரன் தேவைப்பட்ட நிலையில் ஒரு பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க கடைசி பந்தில் இரண்டு ரன் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அப்போது மலிங்கா பந்துவீச்சில் தாக்கூர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்

இதையடுத்து ஒரு ரன்னில் சென்னை அணி தோல்வியை தழுவியது. நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை மும்பை அணி வென்றது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Related articles

Recent articles

spot_img