
முத்தலாக்கால் பாதிக்கப் பட்ட முஸ்லிம் பெண் இந்து மதத்திற்கு மாறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர் ரேஷ்மா (வயது 29) முஸ்லிம் பெண்ணை கொடுமை படுத்தி வந்த அவரது கணவர், ஒரு கட்டத்தில் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறியுள்ளார்.
மேலும் கணவர் குடும்பத்தால் அப்பெண் வீதியில் கொண்டு வந்து விடப் பட்டார். இச்சம்பவம் கடந்த 2019 ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி நடந்துள்ளது.
இதனால் அந்த பெண் மிகவும் வேதனை அடைந்துள்ளார். இப்பிரச்சனையை சரி செய்ய பெண் குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லாமல் போனது.
இந்நிலையில் தனக்கு விவகரத்து கொடுத்த கணவருடன் இனி என்னால் சோ்ந்து வாழ முடியாது என திட்டவட்டமாக கூறி வந்துள்ளார்.
இதனால் ரேஷ்மாவின் பெற்றோர் செய்வதறியாது திணறி வந்த நிலையில் தனது வீட்டின் அருகே குடியிருந்து வரும் தீபக் என்ற இந்து மணமகனை திருமணம் செய்து இந்துவாக மாறிவிட சம்மதம் தெரிவித்தார்.
இதனையடுத்து இருவீட்டாரின் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ரேஷ்மா–தீபக் திருமணம் உறுதி செய்யப்பட்டது.
பின்னர் பெற்றோர் மற்றும் உறவினா்கள் முன்னிலையில் தீபக்–ரேஷ்மா திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
மேலும் ரேஷ்மா இந்துவாக மாறிய பின்னர் அவர் தனது பெயரை ராணிரத்தோட் என பெயர் மாற்றமும் செய்து கொண்டார்.
மேலும் ரேஷ்மாவின் 2 வயது பெண் குழந்தை முதல் கணவா் வீட்டில் உள்ளது குறிப்பிடதக்கது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .



