
பொள்ளச்சி அருகே வேலைக்கு செல்லுமாறு தாய் கூறியதால், ஆத்திரமடைந்த மகன் சுவற்றின்மீது தள்ளிவிட்டதில் தாய் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே ஊஞ்ச வேலாம்பட்டி செல்வகணபதி நகரை சேர்ந்தவர் செல்லம்மாள்.
இவரது கணாவர் பெருமாள்சாமி சில வருடங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார்.
இவர்களது மகன் மௌன குருசாமி பி.எஸ்சி படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இதனால் செல்லம்மாள் மகன் மௌனகுருசாமியை வேலைக்கு செல்லும்படி வற்பறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை செல்லம்மாள், வழக்கம்போல மகன் மௌனகுரு சாமியிடம் படித்துவிட்டு வீட்டிலேயே இருப்பதற்கு பதிலாக ஏதாவது வேலைக்கு போகுமாறு அறிவுரை கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மௌனகுரு தாயை சுவற்றின் மீது பலமாக தள்ளிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
பின்னர் இரவு 8 மணியளவில் வீடு திரும்பிய போது செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் சலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்த்துக்கு விரைந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் செல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மௌனகுரு சாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாயை ஆத்திரத்தில் தான் தள்ளி விட்டு சென்று விட்டதாக மெளன குரு காவல்துறையினரிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



