காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை ஏற்க காங்கிரஸ் காரியக் கமிட்டி நிராகரித்த போதிலும், தாம் பதவி விலகும் முடிவிலிருந்து மாறப்போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார் … .
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற படுதோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக ராகுல் கூறியிருந்தார்.
ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டியில் கட்சி நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராகுலின் முடிவை நிராகரித்தனர்
எனவே ராகுல் ராஜினாமா முடிவு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாயின இருப்பினும் இது ஒரு நாடகம் என்று சமூக வலைதளங்களிலும் அரசியல் மட்டத்திலும் கேலி செய்யப்பட்டது
இந்நிலையில் ராகுல் ராஜினாமா செய்ய முன் வந்தார் என்பதும் நிர்வாகிகள் அதை ஏற்க மறுத்தார்கள் என்பதும் தவறான தகவல் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியிருந்தார்
இந்நிலையில் ராகுல் தனது முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றும் ராஜினாமா செய்தே தீருவது என்று உறுதியாக இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன
இதை தொடர்ந்து சோனியா குடும்பத்தை சேராத ஒருவரை புதிய தலைவராக தேர்வு செய்யும்படி கட்சியினரிடம் ராகுல் கூறி உள்ளாகவும், தேர்தல் தோல்விக்கு ராகுல் காரணம் என்று கட்சி நிர்வாகிகளோ அல்லது கட்சி நிர்வாகிகள் காரணம் என்று மீது ராகுலோ குற்றம் சாட்டவில்லை என்று கூறப்படுகிறது.
ராகுலின் இந்த முடிவிற்கு சோனியா, பிரியங்கா உள்ளிட்டோரும் ஒப்புதல் தெரிவித்து விட்டனராம்
இதனால் புதிய தலைவரை தேர்வு செய்யும்படி கட்சி நிர்வாகிகளிடம் ராகுல் கூறி உள்ளாராம்
இது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் வெறும் பேச்சுக்கு கூறவில்லை. அவர் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.