December 7, 2025, 2:27 AM
25.6 C
Chennai

திருப்பதி தேவஸ்தான சேர்மனாக சித்தப்பா சுப்பா ரெட்டியை ‘டிக்’ அடித்த ஜெகன்! கொந்தளிக்கும் அரசியல் சூழல்!

subba reddy jagan mohan - 2025

திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மனாக ஒய் வீ சுப்பா ரெட்டியின் பெயரை நிச்சயம் செய்தார் ஜெகன். ஆனால்…

திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் பதவிக்கு ஆந்திர அரசு ஒய் வீ சுப்பா ரெட்டியை தேர்ந்தெடுத்துள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது. இவர் ஜெகனுக்கு நெருங்கிய உறவினர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மன் பதவியை நடிகர் மோகன்பாபுவுக்கு கொடுக்கப் போகிறார் என்று சில நாட்கள் முன்பு செய்தி வெளிவந்தது. ஆந்திரத்தில் ஒய் எஸ் ஆர் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மனும் நிர்வாக உறுப்பினர்களும் மாறுவார்கள் அல்லது மாற்றப் படுவார்கள்  என்ற செய்தி சலசலப்பை ஏற்படுத்தியது.

தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மனாக உள்ள ‘புட்டா சுதாகர் யாத’வின் இடத்தில் வேறொருவரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்று பேச்சு அடிபட்டது. இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மனாக ஒய் வீ சுப்பாரெட்டியின் பெயரை ஜகன் தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜெகனின் சித்தப்பாதான் ஒய் வீ சுப்பா ரெட்டி. இவர் சென்ற தேர்தலில் ஓங்கோலிலிருந்து மக்களவைக்கு போட்டியிட விரும்பினார். ஆனால் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஒய் எஸ் ஆர் கட்சிக்குத் தாவிய “மாகுண்ட்ட ஸ்ரீனிவாசலு ரெட்டி”க்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்பதற்காக சுப்பா ரெட்டிக்கு ஜகன் வாய்ப்பளிக்க வில்லை. அதனால் அவர் கொஞ்சம் மனவருத்தத்தோடு இருந்தார்.

திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மன் பதவியை ஒய் வீ சுப்பாரெட்டிக்கு அளிக்கலாம் என்று முடிவு செய்தார் ஜெகன் . தனக்கு மாநிலங்களவை சீட் வேண்டும் என்று ஜெகனை கேட்டுள்ளார் சுப்பா ரெட்டி. முதலில் திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மன் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தன் சித்தப்பாவை ஜெகன் கேட்டுக் கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.jagan at tirupathi - 2025

இது தொடர்பாகக விரைவிலேயே அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது என்று கூறப் படுகிறது.

ஜெகனின் தாயார் விஜயம்மாவின் தங்கை சுவர்ணலதாவின் கணவர்தான் ஒய்வீ சுப்பா ரெட்டி. கோதாவரி மாவட்டங்களுக்கு தொடர்புடைய ஒயெஸ்ஸார் கட்சியின் பொறுப்பாளராக இருந்து வந்தார். 2014 தேர்தலில் ஓங்கோல் எம்பியாக வெற்றி பெற்ற இவர் …ஆந்திரப் பிரதேச சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் கோரிக்கை வைத்து தன் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜெகன் முதலமைச்சர் ஆனவுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் சேர்மன் பதவியில் இருந்து இயக்குனர் ராகவேந்திர ராவ் விலகினார். இது பரபரப்பாகப் பேசப் பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மன் பதவியை திரைப்பட நடிகர் மோகன்பாபுவுக்கு கொடுக்கப் போவதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று மோகன்பாபு மீடியாவை கேட்டுக்கொண்டார்.

தற்போது தேவஸ்தான சேர்மனாக உள்ள சுதாகர் யாதவ் பதவியிலிருந்து விலக மறுத்து விட்டார் . எனவே தனி அரசாணை மூலம் தற்போதைய நிர்வாகக் குழுவை கலைத்து விட ஏற்பாடு செய்துவருகிறது ஆந்திரப் பிரதேச அரசு. இதற்கு கடும் எதிர்ப்பும் புயலும் கிளம்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories