புது தில்லி: பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம்தான் வரும் என்று, ஜனதா பரிவார் குறித்து கருத்து தெரிவித்தார் பாஜக தேசியச் செயலர் அமித் ஷா. பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பாஜக., சார்பில் கொண்டாடப்பட்ட அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பேசியபோது: ஜனதா கட்சிகள் இணைந்து எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும், பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில், அது வெற்றி பெறாது. இங்கே பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம்தானே வரும். அதுபோலத்தான், பாஜகவுக்கு எதிராக நிதீஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் அமைக்கும் கூட்டணியும். ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் கூட்டணி அமைப்பதால் பாஜகவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. 2010ஆம் ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கூட்டணியிலிருந்து வெளியேறி, பாஜகவின் முதுகில் குத்திய நிதீஷ் குமார், காட்டாட்சி நடத்திய லாலு பிரசாத் யாதவுடன் மீண்டும் கைகோக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம்தான் வரும்: அமித் ஷாவின் கணக்கு!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari