மும்மொழிக் கொள்கை! இந்தி… கட்டாயம் அல்ல; விருப்பப் பாடம்!

Published:

kasturirangan comittee - 2026

இந்தி மொழி பேசாத தென் மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் அல்ல என்றும் அது விருப்பப் பாடம் தான் என்றும் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் தெளிவாக்கப் பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 6ஆம் வகுப்பு முதல் மூன்றாவது மொழி கட்டாயம் கற்பிக்கப் படவேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

இந்நிலையில், இதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அரசியல்வாதிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இது வரைவு அறிக்கை மட்டுமே என்று மத்திய அரசு தெளிவாக்கிய போதும், இந்த அம்சம் கட்டாயமாகத் திணிக்கப் பட்டுள்ளது என்று கூறி, ஊடகங்களில் பிரசாரம் செய்யப் பட்டது. இது குறித்து விவாதங்களையும் ஊடகங்கள் நடத்தின.

இந்நிலையில், கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரை செய்துள்ள வரைவு அறிக்கையில் உள்ள விவரங்களை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதில், இந்தி கட்டாயமல்ல, விருப்பப் பாடமாக மட்டுமே இருக்கும் என்று கூறப் பட்டுள்ளது.

ALSO READ:  திருக்கோயில்கள்-81 நூல் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img