ஹைதராபாத்தில் இருந்த ஆந்திரப் பிரதேசத்துக்கு ஒதுக்கப்பட்ட அரசுக் கட்டடங்களை ஆந்திரப் பிரதேசம் தெலங்கானா அரசிடம் ஒப்படைத்தது.
ஹைதராபாத்தில் இருந்த ஆந்திர பிரதேச கட்டடங்களை தெலங்கானா அரசிடம் ஒப்படைப்பதற்கு ஜெகன் ஒப்புக்கொண்டார். ஆளுநரின் முன்னிலையில் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகனும் தெலங்கானா முதல்வர் கேசிஆரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பின் சம்மதத்துடன் கட்டடங்களை தெலங்கானவுக்கு ஒதுக்கி ஆளுநர் நரசிம்மன் உத்தரவு பிறப்பித்தார்.
ஆந்திர பிரதேச அரசுக்கு ஒதுக்கிய கட்டடங்களை தெலங்கானா அரசிடம் ஒப்படைத்து இரு மாநில கவர்னர் ஈஎஸ்எல் நரசிம்மன் ஞாயிறன்று உத்தரவு பிறப்பித்தார். அதேபோல் ஆந்திரப் பிரதேச காவல் துறையின் தேவைகளுக்காக ஒரு கட்டடமும் பிற அலுவலக நிர்வாகத்திற்காக மற்றுமொரு கட்டடமும் ஆந்திரப் பிரதேசத்துக்கு ஒதுக்குவதாக அந்த உத்தரவில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர மாநில பிரிவினையின் போது பத்து ஆண்டுகளுக்கு ஹைதராபாத் நகரத்தை பொது தலைநகராக அறிவித்தார்கள். இந்தப் பத்தாண்டு காலத்திற்கு இரு மாநிலங்களுக்கும் சமமாக ஹைதராபாதில் அரசாங்க கட்டடங்களை ஒதுக்கினார்கள். ஹைதராபாதிலிருந்து ஆந்திரப் பிரதேசத்துக்கான அலுவலகங்கள் அனைத்தும் புதிய தலைநகரான அமராவதிக்கு சிறிது சிறிதாக மாற்றப் பட்டு விட்டன.
ஹைதராபாதில் ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒதுக்கிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை போன்றவற்றுடன் பிற கட்டடங்களும் இப்போது காலியாகிவிட்டன. ஆந்திரத்துக்கு ஒதுக்கிய கட்டடங்களை அவர்கள் பயன்படுத்தாததால் பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன. எனவே அவற்றை தம் மாநிலத்துக்கு அளிக்க வேண்டும் என்று தெலங்கானா அரசு தொடர்ந்து ஆளுநரிடம் கோரி வந்தது.
அந்தப் பிரச்னை ஞாயிறுடன் தீர்ந்தது. சனிக்கிழமை இரவு நடந்த இஃப்தார் விருந்திற்காக வந்த ஆந்திர முதல்வர் ஜெகன், தெலுங்கானா முதல்வர் கேசிஆர் இருவரும் ஆளுநர் நரசிம்மன் முன்னிலையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, கட்டடங்களை தெலங்கானா அரசிடம் ஒப்படைப்பதற்கு ஜெகன் அங்கீகரித்தார்
அதேபோல் ஹைதராபாதில் உள்ள கட்டடங்களை தம் மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று தெலங்கானா அரசும் ஆளுநரிடம் கூறியது. இதை அடுத்து அவர் இருமாநில ஒப்புதலுடன் கட்டடங்களை தெலங்கானாவுக்கு ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தார்!




