ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் குழுவில் ஜெயசுதா – முக்கிய பதவியின் மேல் கண் வைத்திருக்கிறார்.
முன்பு ‘மா’ தேர்தலில் போட்டியிட்டதுடன், ஒய்எஸ் ராஜசேகர் ஆட்சியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஜெயசுதா. நாமினேட் பதவியின் மேல் ஜெயசுதாவுக்கு ஆசை பிறந்துள்ளது. ஏ பி பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் சேர் பெர்சனாக விரும்புகிறார் ஜெயசுதா !
2019 தேர்தலில் ஜெகன் நிச்சயம் வென்று முதல்வராவார் என்று எதிர்பார்த்து கட்சியில் சேர்ந்தார் திரைப்பட நடிகை ஜெயசுதா. எதிர்பார்த்தது போலவே ஜெகன் முதலமைச்சர் ஆனார்.
தற்போது ஜெகனின் டீமில் முக்கிய பதவியை கைப்பற்ற போகிறார் ஜெயசுதா. “கட்சியை பலப்படுத்துவதற்கு முயற்சி செய்வேன். தனிப்பட்ட வகையில் எங்கிருந்தும் போட்டியிட வேண்டும் என்று நினைக்கவில்லை. ஜெகனின் உத்தரவுபடி சேவை புரிவேன்” என்று கூறி இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருந்த ஜெயசுதா, ஜெகன் வெற்றி பெற்றவுடன் நாமினேடட் பதவியை கோருகிறார்.
தெலுங்குதேசம் பார்ட்டியின் நாமினேடட் போஸ்ட்கள் வரிசையாக காலி ஆவதால் அந்த இடங்களில் முக்கியமானதான ஏபி ஃப்லிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் சேர்மன் பதவியின் மீது ஆசை வைத்து உள்ளார் ஜெயசுதா.
முன்பு ‘மா’ தேர்தலில் போட்டியிட்டு இருந்ததோடு கூட ஒய்எஸ்ஆர் ஆட்சியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆக பணிபுரிந்தது திரைப்பட உலகின் முக்கியமானவர்களோடு நெருங்கிய தொடர்பு இருப்பது….. போன்றவற்றால் ஏபி பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் சேர்மன் பதவிக்கு ஜெயசுதா பொருத்தமானவராக இருப்பார் என்று ஜெகனும் கூறி வருகிறார்.
இந்த பதவிக்கு ஜெயசுதாவுடன் இன்னும் சிலரும் மல்லுக்கட்டுகின்றனர். நடந்து முடிந்த தேர்தலில் ஜெயசுதாவோடு கூட மோகன்பாபு ஜீவிதா ராஜசேகர் பானுசந்தர் போன்றவர்கள் ஒய்சிபி தரப்பில் பிரச்சாரம் செய்தார்கள்.
இவர்களுள் ஜெயசுதா மோகன்பாபு ஜீவிதா, ராஜசேகர் ஆகியோர் நாமினேட் பதவிகளின் மேல் கண் வைத்து உள்ளார்கள். மோகன்பாபு திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மனாக போகிறார் என்று கூட பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
தெலுங்கு தேசம் ஆட்சியில் ஏபி பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் சேர்மனாக இருந்த அம்பிகா கிருஷ்ணா சமீபத்தில் ராஜினாமா செய்ததால் இந்த ரேஸில் வந்துள்ளார் ஜெயசுதா. ஆயினும் இந்த பந்தயத்தில் மோகன்பாபுவின் பெயரும் உள்ளது.




