குடும்பத்தோடு ஜாலியாக வெளிநாட்டுக்கு சந்திரபாபு நாயுடு.! தேர்தலில் தோற்ற பிறகு குடும்பத்தோடு செலவழிப்பதற்கு நேரம் ஒதுக்கி உள்ள நாயுடு இந்த மாதம் 7ஆம் தேதி வெளிநாடு செல்கிறார். அதிகாரிகளும் கட்சிக்காரர்களும் பயணம் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக ஐந்தாண்டுகளாக ஓய்வின்றி உழைத்த தெலுகு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு இப்போது ஓய்வு கிடைத்துள்ளது.
தேர்தலின் போது பிரச்சாரத்தின் மீது பார்வையை நிறுத்தி கண் மூடாமல் உழைத்த சந்திரபாபு இப்போது சற்று ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தெலுகு தேசம் கட்சியின் மோசமான தோல்விக்குப் பின் என்டிஆர் பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் கட்சிக் கூட்டத்திலும் பங்குபெற்ற சந்திரபாபு நாயுடு தற்போது ஒரு வார காலம் வெளிநாட்டுப் பயணம் மேற் கொள்ளப் போகிறார்.
குடும்பத்துடன் இந்த மாதம் 7ஆம் தேதி கிளம்பிச் சென்று 14ம் தேதி விஜயவாடாவுக்கு திரும்பவுள்ளார். அதன்பின் கட்சியை பலப்படுத்துவதற்காக தலைவர்களுடன் வரிசையாக கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்துள்ளார்.
எந்த நாட்டுக்குச் செல்கிறார் என்பதை ரகசியமாக வைத்துள்ளார்கள். இத்தனை நாள் மாநிலத்தில் ஆட்சியில் மூழ்கியிருந்த சந்திரபாபு பேரனோடு ஜாலியாக பொழுதை கழிக்க போகிறாராம்!



