வரும் ஆண்டுகளில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மத்தியில் இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான ஆட்சி அமைந்துள்ள நிலையில், நிதின் கட்காரி, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்ச்சாலை, சிறு, குறு நடுத்தர தொழில் துறை அமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில் தனது துறையில் மேற்கொள்ளப்பட உள்ள செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெடுஞ்சாலை துறைக்கான செயல் திட்டத்தை வகுத்துள்ளோம். அதன்படி, வரும் 5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அவற்றில் 22 பசுமை வழிச்சாலைகளும் அடங்கும். 20 முதல் 25 நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாக கண்டுபிடித்துள்ளோம். கிடப்பில் உள்ள திட்டங்களை 100 நாட்களில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.



