புதிதாக அமைக்கப்பட்ட 17 வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஜூலை 26 வரை நடைபெற உள்ளது.
இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளதால், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே முத்தலாக் தடை சட்ட திருத்த மசோதா கட்டாயம் நிறைவேற்றப்படும்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜகவிற்கு தற்போது உறுப்பினர்கள் அதிகரித்துள்ளனர். இதன் காரணமாக எளிதாக மசோதா நிறைவேற்றப்படும்.
முத்தலாக் தடை சட்ட மசோதாவில் முஸ்லீம் பெண்களுக்கு தலாக் கூறும் கணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தணடனை, அபராதம், குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் மசோதாவில் இடம் பெறும் என்றும் தெரிகிறது.



