ரூ.16 ஆயிரத்தில் மகள் திருமணத்தை முடித்த ஐஏஎஸ்., இப்போது திருப்பதி தேவஸ்தான ஜேஇஓ!

Published:

vasanthakumar andhra ias - 2026

16 ஆயிரம் ரூபாயில் மகளின் திருமணத்தை முடித்த ஐஏஎஸ் அதிகாரி வசந்தகுமார் இப்போது திருமலா திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலராக நியமிக்கப் பட்டுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலராகப்  பதவி வகித்துவரும் ஸ்ரீனிவாசராஜுவை ஆந்திர அரசு பணியிலிருந்து மாற்றியுள்ளது. திருமலா திருப்பதி தேவஸ்தான  இணை செயல் அலுவலராக ஸ்ரீனிவாச ராஜுவின் இடத்தில் வசந்த் குமார் நியமிக்கப் பட்டுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மனாக பொறுப்பேற்ற ஒய்வி சுப்பா ரெட்டி திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் செயற்குழுவை மாற்றி அமைக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதற்கு ஏற்ப மாற்றங்கள் ஆரம்பமாகிவிட்டன.

ரோசையா ஆட்சிக் காலத்தில் திருமலா திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலராக நியமிக்கப்பட்ட ஸ்ரீனிவாசராஜுவின் இடத்தில் வசந்த்குமாரை நியமித்து ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

21 July09 Thirupathi - 2026விசாகா மெட்ரோபாலிட்டன் டெவலப்மெண்ட் அதாரிடி VMDA வின் துணைத் தலைவராக உள்ள வசந்தகுமாருக்கு கூடுதலாக இந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளது அரசு. உடனடியாக திருமலா திருப்பதி தேவஸ்தான ஜேஇஓ.,வாக பொறுப்பேற்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஸ்ரீனிவாச ராஜுவுக்கு அரசு இன்னும் எந்தப் பொறுப்பையும் அளிக்கவில்லை. அடுத்த பணியிடத்துக்காக, பொது நிர்வாகத் துறையிடம் தகவல் அளிக்குமாறு அரசு அவருக்கு உத்தரவிட்டுள்ளது .

பி. வசந்தகுமார் முன்பு ஆளுநர் மாளிகையில், ஆளுநர் நரசிம்மனின் செயலாளராகப் பணியாற்றினார். 2012இல் ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு பெற்ற அவர் விசாகா நகர் வளர்ச்சித் துறையின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

2017இல் வெறும் பதினாறு ஆயிரத்து நூறு ரூபாய் செலவில் தன் மகளுக்கு திருமணம் செய்து செய்திகளில் அதிகம் உலாவந்தார். 2019 பிப்ரவரியில் வெறும் 18 ஆயிரம் ரூபாயில் தன் மகனுக்கு திருமணம் செய்து மீண்டும் செய்திகளில் பேசப்பட்டார். மகனின் திருமணத்திற்கு பெண் வீட்டாரும் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்தனர்.

தன் இரு பிள்ளைகளின் திருமணத்திலும் விருந்தினர்களிடம் இருந்து மலர்ச் செண்டுகளோ, பரிசுப் பொருள்களோ இவர் பெறவில்லை. உங்கள் காணிக்கைகள் வேண்டாம். ஆசிகள் போதும் என்று திருமணப் பத்திரிக்கையில் தெளிவாக எழுதி யிருந்தார். அவரது எளிமை அப்போது பெரிதாக பேசப் பட்டது. அவர் தற்போது தேவஸ்தான இணை செயல் அலுவலர் ஆகியிருக்கிறார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img