முத்ரா கடன்: தமிழகத்தில்தான் மோசடி அதிகம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்

nirmalaseetha - 2026

முத்ரா கடனில் மோசடி: தமிழகத்தில் அதிகம்

பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தில், வங்கிகளில் உள்ள 2,313 கணக்குகளில் மோசடி நடந்துள்ளது. இதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் அவர், எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

பிரதமர்  முத்ரா கடன் திட்டம் துவங்கப்பட்டது முதல் 2019 ஜூன் 21 வரை 19 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் இருந்து கிடைத்த தகவல் படி, கடந்த 3 ஆண்டுகளில், 2,313 கணக்குகளில் மோசடி நடந்துள்ளது.

தவறு எப்படி நடந்தது. யார் பொறுப்பு என்பது விசாரணை நடந்து வருகிறது.

தொடர்ந்து அதில் உள்ள பிரச்னைகள் சரி செய்யப்படும். இதில் தொடர்புடைய 103 அதிகாரிகளில் 63 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகமாக தமிழகத்தில் 344, சண்டிகரில் 275, ஆந்திராவில் 241 மோசடி நடந்துள்ளன.

இவ்வாறு அந்த பதிலில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.