December 7, 2025, 1:44 PM
28.4 C
Chennai

ருஷி வாக்கியம் (73) – வேதத்தில் உள்ளதே ராமாயணத்திலும் உள்ளது!

rv1 2 - 2025
வேதம், புராணம், இதிகாசம், காவியம் இந்த நான்கும் சனாதன தர்மத்தின் முக்கியமான நூல்கள். இவை தவிர மந்திர சாஸ்திரம், வேதங்களுக்கு துணை அங்கங்களான ஜோதிட சாஸ்திரம், யோக சாஸ்திரம் போன்றவை அனைத்தும் சேர்ந்ததே சனாதன தர்மம்.

இவற்றுள் ஏதோ ஒரு புத்தகத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு மீதி உள்ளவற்றுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தள்ளி விடுவது தவறு. உதாரணத்திற்கு வேதம் மிக உயர்ந்தது. வேதத்தில் பரமாத்மாவை பற்றி கூறியுள்ளார்கள். ஆனால் சிலர் தமக்கு பாண்டித்தியம் இருக்கிறதென்பதால் தான் படிக்காதவற்றைப் பற்றிக் கூட பேசுவது என்பது விந்தையே!

“வேதத்தில் பிற தெய்வங்களைப் பற்றிக் கூறவில்லை! ஒன்றேயான பரமாத்மா பற்றி மட்டுமே கூறியுள்ளார்கள்” என்று பேசுகிறவர்கள் உள்ளார்கள். வேதத்திலேயே இந்திரன் அக்னி போன்ற பெயர்கள் உள்ளன. தெய்வங்கள், ருஷிகள் என்ற பன்மைச் சொற்கள் காணப்படுகின்றன.

இன்னும் சொல்லப்போனால், “வேதத்தில் ராமரைப் பற்றி இல்லை. கிருஷ்ணரைப் பற்றி இல்லை. ஏனென்றால் ராமர் கிருஷ்ணர் அவதாரங்கள் பின்னர் ஏற்பட்டவை. அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே வேதம் உள்ளது. அக்காரணத்தால் ராமரும் கிருஷ்ணரும் தெய்வங்கள் என்று பின்னர் இயற்றப்பட்ட நூல்களைக் கொண்டு தெரிந்து கொண்டோமே தவிர வேதங்களில் கூறப்படவில்லை” என்கின்றனர் சிலர். இவ்வாறு எழும் வாதங்கள் கேட்பதற்கு சுவையாக தென்பட்டாலும் இதில் குற்றம் உள்ளது.

ஏனென்றால், “ராமாயணம் வேதத்தின் சொரூபமே! வேதமே இராமாயணமாக உள்ளது” என்பது பெரியவர்கள் அனைவரின் முடிவும் கூட. அது குறித்து பிரசித்தி பெற்ற ஸ்லோகங்கள் பரவலாகக் கிடைக்கின்றன. வேதம் ராமாயணம் இரண்டும் ஒன்றே என்ற கருத்தில்,

“வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே !
வேத: ப்ராசேதஸா தாஸீத் சாக்ஷாத் ராமாயணாத் மநா !!”

என்பது புகழ்பெற்ற ஸ்லோகம். இதனை ஆதிசங்கரர் எழுதியதாக சிலர் கூறுவர். வேதத்தில் போற்றப்படும் பிரம்மம் ராமனாக அவதரித்தபோது வேதமே இராமாயணமாக ஆனது என்பது இதன் கருத்து.

இது ராமாயணத்தை பற்றியும் வேதத்தைப் பற்றியும் பக்தி பாவனை கொண்ட மகாத்மா யாரோ ஒருவர் இயற்றிய ஸ்லோகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ராமாயணத்தில் வால்மீகி முனிவர் அனேக இடங்களில் இது குறித்து விவரித்துள்ளார்.

“இதம் பவித்ரம் பாபக்னம் புண்யம் வேதைஸ்ச சம்மிதம்” என்கிறார் ஓரிடத்தில்.

வேறொரு இடத்தில் “ராமாயணம் வேத சமம். ஸ்ராத்தேஷு ஸ்ராவயேத் புத: !” என்று அற்புதமாக விவரிக்கிறார்.

இதையும் வால்மீகிதான் எழுதியுள்ளார். “ராமாயணம் வேதத்திற்குச் சமமானது. இதனை ஸ்ராத்தம் போன்ற செயல்களின் போது படித்தால் சத்கதி கிடைக்கிறது. ராமாயணம் ஒரு மகா புருஷரின் கதை மட்டுமேயல்ல. மகிமை பொருந்திய நூல்!” என்று வால்மீகி தெரிவிக்கிறார்.

பாலகாண்டம் நான்காவது சர்கத்தில் அழகான செய்தி ஒன்று உள்ளது. வால்மீகி மகரிஷி ராமாயணத்தை எழுதி லவன், குசன் இருவரிடமும் அளிக்கிறார். அவ்வாறு அளிக்கும் போது,

“வேதோப ப்ரும்ஹணார்தாய தாவக் ராஹயதப்ரபு ! இத்யுக்த ஸ்லோகஸ்யாபி…”
என்று கூறுகிறார்.

“வேதம் எடுத்துக் கூறும் தத்துவம் எது? சத்தியம் எது? என்று தெளிவாக தெரிவிப்பதற்காக ராமாயணத்தை இயற்றி லவனுக்கும் குசனுக்கும் வால்மீகி அளித்தார்” என்று இந்த வாக்கியத்தை வால்மீகியே எழுதியுள்ளார். இதனைக் கொண்டு நாம் அறிய வேண்டியது வேதத்தில் கூறப்பட்டதே இராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது என்பதை.

இன்னும் ஆழ்ந்து சிந்தித்தால் வேதம் ஒரு காலத்தோடு தொடர்புடைய நூல் அல்ல! ஒரு காலகட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கலாம். ஆனால் அது கடந்த காலத்தின் வரலாற்று நூல் அல்ல! அது எல்லையற்ற காலத்திற்கு ஏற்புடைய படைப்பு!

வேதங்களில் ராமச்சந்திரமூர்த்தி எனப்படும் பரமாத்மாவின் சொரூபம் அவதரிக்க போகிறது என்று கூறப்பட்டுள்ளது. எனவே ராமாயணத்தில் அனேக ஸ்லோகங்களில் வேத மந்திரங்கள் தென்படும். அதைக் கூற வேண்டும் என்றால் வேதம், ராமாயணம் இரண்டையும் படித்தவர்கள்தான் கூற வேண்டும்.

இவ்விஷயம் பற்றிக் கூறுகையில் ஒரு இடத்தில்

“ஸ்ரீமத்வால்மீகி ராமாயண ஸ்லோகாத் க்ருஷ்ண யஜுர் வேதீய ப்ரதம காண்டே பிரச்னாஷ்டகம் உத்ருத்யாத் !” – என்கிறார்.

பரத்வாஜ மகரிஷி, வால்மீகி ராமாயண ஸ்லோகங்களிலிருந்து கிருஷ்ண யஜுர் வேதம் பிரதம காண்டத்தில் இருக்கும் எட்டு கேள்வி பதில்களை வெளியில் எடுத்தாராம். இதன்மூலம் ராமாயணத்தில் வேதம் எவ்வாறு மறைந்துள்ளதோ அறிய முடிகிறது.

வேதம் முன்மொழியும் பிரம்மமே ராமன் என்று ராமாயணம் கூறுகிறது. வேதத்தில் இருக்கும் அநேக மந்திரங்களில் ராம தத்துவம் கூறப்பட்டுள்ளது. எந்த தத்துவம் விளக்கப்பட்டுள்ளதோ அந்த தத்துவம் பின்னர் வந்த அவதாரங்களில் உள்ளது என்று வரலாறு தெரிவிக்கிறது.

எனவே வேதத்தை அத்யயனம் செய்து விட்டு ராமாயணத்தை படித்துப் பார்த்தால் ராமாயணத்திற்கும் வேதத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது புரியும். இங்கு வேதத்தை கௌரவிப்பவர்கள் அனைவரும் வேதத்தில் கூறப்பட்ட தத்துவத்தின் பொருளே ராமன் என்பதையும் கௌரவிக்க வேண்டும். அதனால் “ராமச்சந்திர பரப்பிரம்மா!” என்கிறார்கள். வேதத்தை மதிப்பவர்கள் ராமாயணத்தையும் அதே அளவு கௌரவிப்பார்கள். அதேபோல் கிருஷ்ணரையும் அதே அளவு கௌரவிப்பார்கள்.

“நிகம கல்பதரோர் கலிதம் பலம் !” என்கிறார் பாகவதத்தில். “வேதம் என்ற கல்பவிருட்சத்தில் இருந்து பழுத்த பழம் பாகவதம்” என்கிறார்.

இதனைக் கொண்டு வேதத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதுவே ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்றவற்றிலும் கூறப்பட்டுள்ளன என்றறிகிறோம். வேதம் வேறு ராமாயணம், பாகவதம், மகாபாரதம் வேறு என்ற அபிப்பிராயம் ஹிந்துக்களுக்கு இல்லை! வரக்கூடாது கூட! இதனை அறிய வேண்டும். வேதம் புராணம் இதிகாசம் இவை அனைத்தும் ஒன்றோடொன்று அனுபந்தம் கொண்டவை!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

Topics

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Entertainment News

Popular Categories