spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாமதரஸாக்களுக்கு அரசு நிதிஉதவி ஏன்?: கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

மதரஸாக்களுக்கு அரசு நிதிஉதவி ஏன்?: கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

- Advertisement -
kerala high court e1543338664856
kerala high court

மதச் செயல்களில் ஈடுபடும் மதரஸாக்களுக்கு அரசு ஏன் நிதியளிக்கிறது என்று கேரள உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

செவ்வாய்க் கிழமை அன்று கேரள உயர் நீதிமன்றம் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசிடம் மாநிலத்தில் மதரஸாக்களை நடத்துவதற்கு ஏராளமான பொதுப் பணத்தை அளிப்பதன் மூலம் ஒரு மத நடவடிக்கைக்கு ஏன் அரசு நிதி அளிக்கிறது என்று கேள்வி எழுப்பியது.

வெளியான தகவல்களின்படி… கேரள உயர்நீதிமன்றம் செவ்வாயன்று ஒரு மனுவை விசாரித்தது. அதனை ஜனநாயகம், சமத்துவம், அமைதி மற்றும் மதச்சார்பின்மைக்கான குடிமக்கள் அமைப்பின் செயலாளர் மனோஜ் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கேரள அரசு மதரசா ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, கேரள மதரஸா ஆசிரியர் நல நிதி சட்டம் 2019 ஐ நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

pinaray vijayan
pinaray vijayan

மனுதாரரின் ஆலோசகர் சி.ராஜேந்திரன், கேரளாவில் உள்ள இந்த மதரஸாக்கள் குர்ஆன் மற்றும் இஸ்லாம் தொடர்பான பிற பாடப்புத்தகங்கள் பற்றிய அறிவை மட்டுமே அளிக்கின்றன என்று கூறினார். எவ்வாறாயினும், இந்தச் சட்டத்தின் கீழ், கேரளாவில் உள்ள மதரஸாக்கள் கூறப்பட்ட நோக்கங்களுக்காக பெரும் தொகையைப் பெற்று வருகின்றன! இது அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கைகளுக்கு எதிரானது என்று மனுதாரர் வாதிட்டார்.

இந்தத் திட்டத்திற்கு மாநில அரசு பொதுமக்களின் பணத்தை பெருமளவு அளித்து வருவதாக மனுதாரர் தெரிவித்தார். 60 ஆண்டுகளை பூர்த்திசெய்த, ஐந்து வருடங்களுக்கும் குறையாத பங்களிப்பை செய்துள்ள ஒரு மதரசா ஆசிரியருக்கு நலநிதியாக ஒரு குறிப்பிட்ட தொகை மற்றும் மாதாந்தர ஓய்வூதியத்தை அரசு தருகிறது.

இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கேரள மதரஸா ஆசிரியர்கள் நல நிதிக்கு அரசு பங்களிப்பு செய்துள்ளதா என்பதை தெளிவுபடுத்துமாறு கேரள அரசிடம் கேட்டுக் கொண்டது.

நீதிபதி ஏ முஹம்மது முஸ்டாக் மற்றும் நீதிபதி கௌஸர் எடப்பாகத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கேரளாவில் உள்ள மதரஸாக்கள் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடத்தப்படுவதிலிருந்து வேறுபட்டவை, அவை மதச்சார்பற்ற மற்றும் மதக் கல்வியை அளித்து வருகின்றன. இருப்பினும், கேரளாவில், மதரஸாக்கள் மதக் கல்வியை மட்டுமே அளிக்கின்றன! இதுபோன்ற மத நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதன் நோக்கம் என்ன என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது!

“கேரளாவில், இவை முற்றிலும் மத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. ஒரு மத நடவடிக்கைக்கு அரசு நிதி பங்களிப்பதன் நோக்கம் என்ன? ” என்று, மாநிலத்தில் மதரஸாக்களுக்கு நிதியளிப்பது குறித்து கேரள உயர் நீதிமன்றம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக, சிறுபான்மை உதவித்தொகை தொடர்பான சர்ச்சைக்குரிய உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது!

இந்த வார தொடக்கத்தில், ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பில், சிறுபான்மை உதவித்தொகை தொடர்பான மூன்று அரசு உத்தரவுகளை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது, இது முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில், உதவித்தொகை விநியோக விகிதத்தை 80:20 என நிர்ணயித்தது.

அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அறிவிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களிடையே சமமான தகுதி மற்றும் உதவித் தொகை வழங்குமாறு கேரள நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிபிஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் அரசாங்கத்திற்கு இது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் முஸ்லீம் அமைப்புகள் முழு ஒதுக்கீட்டையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோருகின்றன.

2015 ஆம் ஆண்டு கேரள அரசாங்கம் வெளியிட்ட உத்தரவில், சிறுபான்மை சமூகங்களுக்கான ஒதுக்கீட்டில் முறையே முஸ்லிம்கள் மற்றும் லத்தீன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு 80:20 தகுதி-உதவித்தொகையை ஒதுக்கியுள்ளது. இருப்பினும், கேரளாவின் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 18.38 சதவீதமாக உள்ளனர், முஸ்லிம்கள் மாநில மக்கள்தொகையில் 26.56 சதவீதமாக உள்ளனர் என்பதால், இந்த விகிதம் நியாயமற்றது என்று கேள்வி எழுப்பப் பட்டது.


கேரளத்தில் பினராய் விஜயனின் கடந்த ஆட்சியில், கே.டி. ஜெலீல் கல்வித்துறை அமைச்சராக இருந்த போது மதரசாவில் வேலைசெய்யும் ஆசிரியர்களுக்கு பென்ஷன் தரும் திட்டத்தை கொண்டு வந்தார்.

கேரளத்தில் சுமார் 27814 மதரசாக்கள் உள்ளது. இவற்றில் ஒவ்வொன்றிலும் 2 ஆசிரியர்கள் வீதம் சுமார் 204684 பேர் ஆசிரியர்களாக உள்ளனர்.

இவர்களின் அடிப்படை பணி என்பது இஸ்லாமிய மத பாடங்களை நடத்துவது. ஆனால் இவர்களுக்கு கேரள அரசு, மாதம்தோறும் ரூ.1500 – முதல் ரூ.7500 வரை சம்பளமாக தருகிறது.

இதுமட்டுமின்றி இவர்களுக்கு பென்ஷன் வகையில் மாதம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 7,500 வரை. தற்போது கொரானா அலவன்ஸ் என மாதம் ரூ.2000 கேரள அரசால் வழங்கப்படுகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe