குடியரசுத் தலைவரை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

nirmala seetharaman president - 2026 இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாடே எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட்டை காலை 11 மணிக்கு தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சகம் சென்றார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 40,027.21(+110 புள்ளிகள்) நிப்டி: 11,976.45(+30 புள்ளிகள்) என உயர்வுடன் தொடங்கியது.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், முதல் மத்திய பட்ஜெட்டை கடந்த 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி அன்றைய நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் தாக்கல் செய்தார்.

பகுதி நேர தற்காலிக நிதி அமைச்சராக இந்திரா காந்தி இருந்துள்ளார். அதன் பின்னர், முழு நேர பெண் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமனே முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

nirmala seetharaman president1 - 2026மத்திய பட்ஜெட்டை 11 மணிக்கு பார்லி.யில் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் மத்திய நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டுவிட்டதால் ரயில்வே திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் இடம் பெறுகின்றன.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை முந்தைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அதில் வருமான வரிச்சலுகை, விவசாயிகளுக்கு நிவாரணம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.

தற்போதைய பட்ஜெட் உரையிலும் முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.