17வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப் பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையுடன், முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிக் கொண்டிருக்கும் போது, தாம் பயின்ற தமிழ்ப் பாடலின் வரிகளை மேற்கோள் காட்டினார்.
அதற்காக அவர், புறநானூறு பாடல் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார். அவர் இந்த சங்கத் தமிழ் இலக்கியம் குறித்து பேச்சைத் தொடங்கி, அதனை இயற்றிய பிசிராந்தையார் குறித்தும் கூறினார்.
பிசிராந்தையார் பெயரைக் கூறும் போது, பிசிர் ஆந்தையார் என்று சற்று தடுமாற்றத்துடனே அவர் கூறினார். அவருக்கு ஏற்ற வார்த்தைத் தடுமாற்றத்தை ஏதோ தாங்கள் எடுத்துக் கொடுப்பது போல், ஆ.ராசாவும் தயாநிதியும் பிசிராந்தையார் பிசிராந்தையார் என்று நிர்மலா சீதாராமன் காதில் விழும் வகையில் கூறினர். அதற்கு பதிலளிக்கும் வகையில், பிசிராந்தையார் என்று அவர்களைப் பார்த்துக் கொண்டு அழுத்தம் திருத்தமாகக் கூறினார் நிர்மலா சீதாராமன். (பிசிர் என்பது ஊர், ஆந்தையார் என்பது புலவரின் பெயர். பிசிர் ஆந்தையார் என்பதே சேர்த்து உச்சரிக்கப் பட்டு, பிசிராந்தையார் என்று ஆனது)
அதன் பின்னர் அந்த புறநானூறு பாடல் வரிகளை தமிழில் கூறிவிட்டு அந்த இரண்டு எம்பி.,களைப் பார்த்து இதன் அர்த்தம் என்ன தெரியுமா? என்று கேட்டபோது இருவரும் சற்றே சீரியஸ் முகத்துடன்… என்ன என்ன என்று கேட்பது போல் பார்த்தனர். ஆ.ராசா அசடு வழிய சிரித்தார். தமிழ் தெரிந்திருந்தும் பாடலின் பொருள் புரியாமல், ஏதோ பிசிராந்தையார் பெயரை மட்டும் அழுத்திக் கூறிய அவர்களின் ஆர்வக் கோளாறைக் கண்டு அவையில் உள்ளோர் நகைத்தனர்.
அதன் பின்னர், இந்தப் பாடலுக்கான விளக்கத்தையும் கூறி, எதனால் இந்தப் பாடலை இங்கே கூறுகிறேன் என்பதற்கான சூழலையும் கூறிவிட்டு திருமதி நிர்மலா சீதாராமன் ஆ.ராசாவையும், தயாநிதி மாறனையும் பார்த்து புன்னகைத்தார். அப் போது அரங்கில் இருந்த அத்தனை பேரும் அவர்களைப் பார்த்து நகைத்தனர்.
அந்த வீடியோ காட்சி.. #வீரத்தமிழச்சிநிர்மலாசீதாராமன்