தபாங் 3 படத்தில் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக நடித்து வருபவர் பாண்டே.
அவருக்கு அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை.
மும்பையில் தபாங் 3 படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார். தபாங் 3 சல்மான் கான் தயாரித்து நடிக்கும் இந்த படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார்.
தபாங் 2 படத்தை அடுத்து தற்போது தபாங் 3 படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான்.
இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக சல்மான் கான் நடிக்கிறார். இவர் வேலை செய்யும் காவல் நிலையத்தில் தான் கான்ஸ்டபிளாக பாண்டே நடித்து வருகிறார்.
பாண்டேவின் நிலை குறித்து சல்மான்கானுக்கு தகவல் கிடைத்துள்ளது. தனது ஆட்களை பாண்டே அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி அவர் நிதியுதவி செய்துள்ளார்.
பாண்டேவை அவ்வப்போது போய் பார்த்துவிட்டு வருமாறு தனது ஆட்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். பிரபலமாக இருக்கும் ஒரு நடிகரான சல்மான் கான் ஒரு ஜூனியர் நடிகருக்கு உதவி செய்து வருவதை கண்டு அனைவரும் அவரைப் பாராட்டுகிறார்கள்.
முன்பு இதேபோல் தனது படத்தில் நடித்த நடிகை தனது குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நிலையில் அவரின் மருத்துவ செலவை ஏற்றார் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடன் படங்களில் நடித்தவர்கள், நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்று தெரிந்தால் முதல் ஆளாக உதவி செய்பவர் சல்மான் கான்.
தபாங் 3 படத்திற்காக சல்மான் தனது உடல் எடையை 5 முதல் 10 கிலோ வரை குறைக்க தேவையான உடற்பயிற்சியில். ஈடுபட்டுள்ளார். அவர் எடையில் ஏற்படும் மாற்றங்களை புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்து சல்மான் கான் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். தனது குடும்பத்தாரின் வீடியோக்களையும் வெளியிடுகிறார்.
தபாங் 3 படத்தில் திருமணமாகாமல் 3 வயது குழந்தைக்கு தாயாக இருப்பதாக அண்மையில் பேட்டி அளித்து அதிர வைத்த மாஹி கில்லும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சல்மானின் தம்பி அர்பாஸ் கானும் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் தபாங் 3 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


