prapas 1 - 2026பாகுபலி 1& 2 திரைப்படங்களுக்குப் பிறகு பிரபாஸுக்கு இந்தியா தவிர உலகம் முழுவதிலும் ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள்

பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் சாஹோ.
இப்படத்தின் டீஸர்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. படம் ரிலீஸ் ஆகும் தேதி ஆகஸ்ட் 15 என அறிவிக்கப்பட்டதில் இருந்து படத்திற்கான எதிர்பார்ப்பும், விளம்பரங்களும் அதிகரித்திருக்கின்றன.

இன்று பிரபாஸ் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் சாஹோவில் இடம்பெறும் ‘சைக்கோ சய்யான்’ இங்க பாரு காதல் சைக்கோ எனத் தொடங்கும் பாடலின் டீஸரை தன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

prapas1 - 2026அதனை முன்னிட்டு சாஹோ திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என நான்கு மொழித்திரைப்படமாக வெளிவரவிருக்கிறது. இத்திரைப்படத்தின் இயக்குனர் சுஜீத், ராதாகிருஷ்ணா ஃபிலிம்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிப்பவர்கள் வம்சி & பிரமோத். இப்படத்திற்கான பாடலை மதன் கார்க்கி எழுதி இருக்கிறார்.

இசையமைத்திருப்பது தனிஷ்க் பக்‌ஷி. பாடலைப் பாடி இருப்பவர் த்வானி பானுஷாலி.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இப்படத்தில் பிரபாஸுடன் ஜாக்கி ஷெராஃப், மந்திரா பேடி,நீல் நிதின் முகேஷ், அருண் விஜய் லால் முரளி ஷர்மா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending