spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாநாட்டை உலுக்கிய அதிர்ச்சி: ஹமீத் அன்சாரி மீது உளவு அதிகாரிகள் ‘தேச விரோத’ புகார்!

நாட்டை உலுக்கிய அதிர்ச்சி: ஹமீத் அன்சாரி மீது உளவு அதிகாரிகள் ‘தேச விரோத’ புகார்!

- Advertisement -

முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் ரா அதிகாரிகள் பிரதமரிடம் மனு அளித்துள்ளனர்.

முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி மீது அப்போதே பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிப்படையாகக் கூறப் பட்டன.

  1. ஹமீத் அன்சாரி டெஹ்ரானில் பணிபுரிந்த போது ரா நடவடிக்கைகளை காட்டிக் கொடுக்கும் விதமாக நடந்து கொண்டார் என்று ஒரு புகார் உண்டு.
  2. பல வருடங்கள் சட்டபூர்வ பதவியில் இருந்த போதும் நமது தேசியக் கொடிக்கு அவர் வணக்கம் செலுத்தியதில்லை.
  3. ராஜ்யசபா டிவி நடத்துகிறேன் என்று பல நூறு கோடி ரூபாய் சுருட்டியதாக புகார் உண்டு.
  4. தேச விரோத, மதவாத அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ளுமளவுக்கு அடிப்படைவாதி அன்சாரி என்று ஒரு புகாரும் உண்டு.
  5. துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து வெளிவந்த பின்னர், சிறுபான்மையினர் வாழ அச்சமான சூழ்நிலை இந்தியாவில் உள்ளது என்று பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்தார்!

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க… ரா – உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரிகள், முன்னாள் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரிக்கு எதிராக ஈரானின் தெஹ்ரானில் தூதராக நியமிக்கப்பட்டபோது நடைபெற்ற சம்பவங்களைச் சொல்லி, ரா – அமைப்பின் நடவடிக்கைகளை நாசப் படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி,  விசாரணை கோரியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவர் நிச்சயம் உண்மையை வெளிக்கொண்டு வருவார் என்று நம்புவதாகவும்  அவர்கள் கூறுகின்றனர்.

அன்சாரி 1990-1992 இல் தெஹ்ரானில் தூதராக பணியில் இருந்தார். அன்சாரியின் பதவிக் காலத்தில் தெஹ்ரானில் பணியில் இருந்த இந்த அதிகாரிகள், இந்த விவகாரம் குறித்து விளக்குவதற்காக, முதலில் ஆகஸ்ட் 2017 இல் பிரதமரை அணுகினர்.

பிரதமருக்கு அவர்கள் அளித்த புகாரில், அன்சாரி, தெஹ்ரானில் பதவியில் இருந்த போது,  ​“இந்தியாவின் தேசிய நலனைப் பாதுகாக்கத் தவறினார் என்பது மட்டுமல்லாமல், ஈரான் அரசுடனும் அதன் உளவுத்துறை நிறுவனமான சவாக்-குடனும் ‘நெருங்கிய ஒத்துழைப்பு’ கொடுத்து ரா – உளவு அமைப்பையும் அதன் நடவடிக்கைகளையும் அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தார். இதன் பின்னர், இந்திய தூதரக அதிகாரிகள், தூதர்கள் சவாக்- அமைப்பால் கடத்தப்பட்டனர். அப்போது, அன்சாரி வேண்டுமென்றே இந்தியாவின் நலனைப் பாதுகாக்கவில்லை. அவர், தனது கடமைகளில் தோல்வியடைந்த வகையில், நான்கு பெரிய சம்பவங்கள் நடந்தன.

அதிகாரிகளில் ஒருவரான என்.கே.சூத், 2010 ஆம் ஆண்டில் ரா அமைப்பில் இருந்து ஓய்வு பெற்றார். அவர், தி சண்டே கார்டியன் பத்திரிகைக்கு அளித்த தகவலில்,  அன்சாரி ஈரானில் ‘ரா’ அலுவலகங்களை மூட பரிந்துரைத்தார்  என்றார்.

சவாக், அதிகாரப்பூர்வமாக 1979 இல் கலைக்கப் பட்டது. அதற்கு பதிலாக, சஸ்மான்-இ எட்டெலாஅட் வா அம்னியாட்-இ மெல்லி-ஈ ஈரான் Sazman-e Ettela’at va Amniat-e Melli-e Iran என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இருப்பினும், ரா உள்ளிட்ட உளவுத்துறை நிறுவனங்கள், ஈரானிய உளவு நிறுவனத்தை அதன் பழைய பெயரான சவாக் மூலமே தொடர்ந்து குறிப்பிடுகின்றன! காரணம், புதிய அமைப்பின் பெயர் கூட சரியாக உச்சரிக்கப்பட இயலவில்லை அல்லது சரியாக அறியப்படவில்லை என்பதே!

அன்சாரி குறித்து, சூத் பல நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார்! இது அன்சாரி, தெஹ்ரானில் இருந்த காலத்தில், எதிர்பார்த்தபடி அவர் தனது கடமையை நிறைவேற்ற வில்லை என்பதைக் காட்டுகிறது.

மே 1991 இல், இந்திய அதிகாரி  சந்தீப் கபூர், தெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து கடத்தப்பட்டார்! இது சவாக்-கால் வெளிப்படையாக நடத்தப்பட்டது. இந்த பிரச்னை அன்சாரியின் முன் கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த போது, அவர் துபையில் இருந்தார். அப்போது ரா – அலுவலகத்தின் தலைவர் அவசரகால சூழ்நிலையை கருத்தில் கொண்டு அன்சாரியிடம்  தனிப்பட்ட வகையில் விளக்குவதற்காக, நேரில் வரவேண்டும் என்று வலியுறுத்திய போதும், அவர் அவசரகால சூழலைக் கருதி  திரும்பி வராமல் போனார்!

கபூரைக் கண்டுபிடிப்பதற்கு அன்சாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! ஆனால் கபூரைக் காணவில்லை என்றும், உள்ளூர் பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால் ஈரானில் அவரது நடவடிக்கைகள் சந்தேகிக்கப்படுவதாகவும் ஒரு ரகசிய அறிக்கையை இந்திய வெளியுறவுத் துறைக்கு அனுப்பினார்.

இந்த வழக்கில் SAVAK இன் தலையீடு குறித்து ‘ரா’ அறிக்கை அளித்திருப்பதை அவர் வேண்டுமென்றே குறிப்பிடத் தவறிவிட்டார் ”என்று சூட் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்திய தூதரகத்திற்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு, ஒன்று வந்தது. அது, கபூர் சாலை ஓரத்தில் ஓர் குறிப்பிட்ட இடத்தில் விழுந்து கிடந்திருப்பதாகக் கூறியது. கபூர் போதை மருந்து எடுத்திருப்பதாகவும் கூறப் பட்டது. ஆனால், இதன் பின் விளைவுகள், வெகுகாலத்துக்கு நீடித்தது. இது தொடர்பாக, ஈரானிய வெளியுறவு அலுவலகத்தில் ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்த  ‘ரா’ அறிவுறுத்திய போதும், அன்சாரி அதைக் கண்டுகொள்ளவே இல்லை.

ஆகஸ்ட் 1991 இல், ஈரானின் மத மையமான கோம்-க்கு தவறாமல் வந்து, ஆயுதப் பயிற்சி மேற்கொண்டிருந்த காஷ்மீர் இளைஞர்களை  ‘ரா’ தீவிரமாகக்  கண்காணித்து வந்தது. அப்போது  அந்த ரா அலுவலகத்துக்கு புதிதாகப் பணியில் சேர்ந்த உயர் அதிகாரி டி.பி.மாத்தூரிடம், பழைய ரா அதிகாரிகள் அன்சாரியிடம் எதுவும் கூற வேண்டாம் என்று  வற்புறுத்திக் கூறியிருந்த போதிலும், அவர் நம்பிக்கையின் அடிப்படையில், அன்சாரியிடம் மேற்படி கோம்-மின் நடவடிக்கைகளை ரா அதிகாரிகள் கண்காணிக்கும் செயல்பாடுகள் குறித்து தகவல் கூறினார்.

ஆனால், பழைய ரா அதிகாரிகள் எதிர்பார்த்தது போலவே, இந்தக் கண்காணிப்பு நடவடிக்கையை கையாண்ட அதிகாரி மாத்தூரின் பெயரை அன்சாரி ஈரான் வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுத்தார்! டி.பி. மாத்தூர் குறித்து, ஈரானிய வெளியுறவு அலுவலகம் SAVAK க்கு அனுப்பியது.  இந்நிலையில், டி.பி. மாத்தூர் இந்திய தூதரகத்திற்கு வரும்போது ஒரு நாள் காலை சவாக்-கால் கடத்திச் செல்லப்பட்டார். மாலையில், அவர் சவாக்-கால் கடத்திச் செல்லப்பட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது” என்று சூட் நினைவு கூர்ந்தார்.

இந்தச் சம்பவம் பிரதமர் மோடியுடன் பகிரப்பட்ட கடிதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க அன்சாரி மறுத்துவிட்டார். அதே நேரம், மாத்தூரைப் பற்றிய  காணாமல் போன அறிக்கையை ஈரானிய வெளியுறவு அலுவலகத்தில் பதிவு செய்து, தில்லியுடன் அதைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர, உறுதியான வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க அன்சாரி மறுத்துவிட்டார்.

​சவாக்.,கில் இருந்து பெரும் சிரமங்களுக்கு இடையே உளவுத் தகவலை மாத்தூர் கசிய விட்டு, ரா அதிகாரிகளிடம் தெரிவித்து, பின்னர் தில்லியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு தெரிவித்தனர். வாஜ்பாய்,  இதை அப்போதைய பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவிடம் பகிர்ந்து கொண்டார். பின்னர், மாத்தூர் கடத்தப்பட்ட நான்காவது நாளில், எவின் சிறையில் இருந்து விடுவிக்க நரசிம்ம ராவ் வழிவகுத்தார்! ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது.

ஒருமுறை இந்திய தூதரகத்திற்குள், மாத்தூர் தனக்கு என்ன நேர்ந்தது என்பதையும், சவாக் ஏற்கனவே சூத் மற்றும் கிளை அலுவகத் தலைவரின் அடையாளத்தைப் பற்றி எவ்வாறு அறிந்திருந்தார் என்பதையும் வெளிப்படுத்தினார்! இது அந்தக் கடிதத்தில், ஈரானிய வெளியுறவு அலுவலகத்துடன் அன்சாரி பகிர்ந்து கொண்ட தகவலைக் கூறுகிறது.

இவ்வாறு, இந்தியாவின் உளவுத் திறன்களை ஆழமாக சேதப்படுத்திய இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிடுவார் என்று இந்த அதிகாரிகள் நம்புகிறார்கள்;  இந்த விவகாரத்தில் மோடி நடவடிக்கை எடுப்பார் என்று தாங்கள் நம்புவதாக உறுதியுடன் கூறுகின்றனர்.

இந்திய தூதரின் இல்லத்தில் பாதுகாப்புப் பணியாளரான முகமது உமர் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் குறித்தும் சூத் நினைவு கூர்ந்தார்! அவர் சவாக்-கால் அழைத்துச் செல்லப்பட்டு மூன்று மணி நேரத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். இது குறித்து அன்சாரிக்கு அறிவிக்கப்பட்டபோது, ​​அவர் சவாக்-கால் “திருப்பி அனுப்பப்பட்டார்” என்று நம்பியதால், அவர் குறித்த உண்மைகளை அறிய ரா தலைவரிடம் கேட்டார். ரா அதிகாரி அவர் நிரபராதி என்று தெளிவாகக் கூறிய போதிலும், அன்சாரி அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்! அவர் வெளிநாட்டு தூதரக பணியிடங்களில் அமர்த்தப் படுவது தடை செய்யப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

சூத் மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அன்சாரி மீது அடுக்குகிறார். போலி விசா மூலம் மாணவர்கள் பெயரில் வேறு சிலர் இந்தியாவுக்கு அனுப்பப் பட்டது குறித்தும், இந்தியாவின் பெயரைக் கெடுப்பதிலும், ரா அமைப்பை சீர்குலைப்பதிலும், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இந்தியாவின் நன்மதிப்பை சாய்ப்பதிலும் அன்சாரி தீவிரமாக ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டுகிறார்.

1993 மத்தியில், அன்சாரி ஈரான் தூதரகத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்யப் பட்ட போது, தூதரகத்தில் இந்திய அதிகாரிகள் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் என்று குறிப்பிடுகிறார் சூத்.

இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளை அன்சாரி மீது அடுக்கும் சூத், தனது டிவிட்டர் பதிவில் ஆச்சரியத்துடன் குறிப்பிட்ட பதிவுதான் இத்தனை உண்மைகளும் வெளிவரக் காரணமாயிற்று! எப்படி இத்தகைய ஒரு தேசத் துரோக செயல்களைச் செய்த நபர், இரு முறை துணை குடியரசுத்தலைவராகத் தேர்வு செய்யப் பட்டார் என்பதுதான் மிகப் பெரும் ஆச்சரியம் என்பதுதான் அது!

1 COMMENT

  1. இந்திய மக்களின் வரிப்பணத்தில் சம்பளமும் உயர் பதவியும் வாங்கிக்கொண்டு தேசதுரோகம் செய்யும் இவன் போன்றோரை கடுமையாக தண்டிக்கவேண்டும். அப்போதுதான் மற்றவர்க்கு ஒரு பாடமாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe