வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் தேமாஜி, லக்கிம்பூர், விஸ்வநாத், நல்பாரி, கோலாஹாட், மஜூலி, நௌகான், மோரிகான் உள்ளிட்ட 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 800க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியதால், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முழ்கிய நிலையில் தேயிலைத் தோட்டங்கள் காணப்படுகின்றது.காவுகாத்தி அருகே காளீப்பூர் என்ற இடத்திலுள்ள சக்ரேஷ்வர் கோவில் நீரில் முழ்கிவிட்டது.கோவில் முழ்கிய போதும் பாம்பின் மீது லட்சுமி தேவியுடன் விஷ்ணு பள்ளி கொண்டிருப்பது போன்ற சிலை மட்டும் மூழ்காமல் உள்ளது.சிலையை சூழ்ந்த படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது திருபாற்கடலில் விஷ்ணுவும் லட்சுமியும் பள்ளிக்கொண்டிருப்பது போலுள்ளது.
இந்நிலையில், டென்காகுரி என்ற இடத்தில் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பள்ளி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.மேலும் மழை நீடிக்கும் என அஞ்சப்படுகிறது.



