போக்சோ திருத்தச்சட்ட மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இந்த சட்டத்தை வலுப்படுத்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த மசோதாவை தாக்கல் செய்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, குழந்தைகளை கொடூரமாக பாலியல் பலாத்காரம் மற்றும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் குழந்தைகள் தொடர்புடைய ஆபாசப் படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றால் அவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், ஆபாசப்படங்களை வெளியிடுவோருக்கு சிறைத் தண்டனை, அபராதம் உள்ளிட்டவற்றை விதிக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.



