December 7, 2024, 7:34 PM
28.4 C
Chennai

ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு… வரிசையில் ‘முத்தலாக்’…! ஓவைஸி கொடுத்த அதிர்ச்சி!

ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு.. இவை எல்லாம் கிரிமினல் குற்றம் அல்ல எனும் போது,  முத்தலாக்கை மட்டும் கிரிமினல் குற்றமாக சித்திரிப்பதா என்று ஓவைஸி கேள்வி எழுப்பி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்வதை கிரிமினல் குற்றம் ஆக்கி தண்டனை விதிக்க வழி செய்யும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2019 மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. டிவிஷன் வாக்கெடுப்பில் ஆதரவாக 302 பேரும் எதிர்த்து 82 பேரும் வாக்களித்தனர்.

முத்தலாக் விவாகரத்து முறையை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வது சட்டப்படி செல்லாது என்று ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. இதன் தொடர் நடவடிக்கையாக முத்தலாக் விவகாரத்தை கிரிமினல் குற்றம் ஆக்கி தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.

கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்ற இயலவில்லை. இதனால் இது குறித்து அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி பிறப்பித்தது.

இந்த அவசரச் சட்டத்தை மாற்றி அமைக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, சட்டமாக்கும் முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கான மசோதாவை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் மக்களவையில் விவாதத்திற்குப் பிறகு பகுதி வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் வெளிநடப்பு செய்தன.  பாஜக கூட்டணியில் இடம் பெறாத பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் மசோதாவை ஆதரித்தன. இதனால் 302 எம்பிக்கள் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது. 82 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இனி மாநிலங்களவையிலும்  இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டம் அமலாக்கப்படும்!

ALSO READ:  சபரிமலை தரிசனம்... இனி ஆன்லைனில் மட்டுமே பதிவு!

முன்னதாக மக்களவையில் இந்த மசோதா மீது நடந்த விவாதத்தின் போது எதிர்ப்புக் கருத்துக்களை தெரிவித்தவர்களில் முக்கியமானவர் அசாதுதீன் ஓவைசி. இவர் ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவர். இவர் இந்த விவாதத்தின் போது தெரிவித்த கருத்தில் ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு இவையெல்லாம் கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் முத்தலாக் முறையை கிரிமினல் குற்றம் என்று எந்த அடிப்படையில் இந்த அரசு தீர்மானிக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

நாகரிக சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்படும் ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு ஆகியவற்றின் வரிசையில் முத்தலாக் முறையையும் அசாதுதீன் ஓவைசி குறிப்பிட்டுள்ளது அவையினருக்கு அதிர்ச்சியை ஏற்பட