December 6, 2025, 5:43 PM
29.4 C
Chennai

வளையல் வியாபாரியின் தலைபாரமும், மனபாரமும் போக்கிவைத்த பெரியவா!

“மனதைத் தொடும் நிகழ்ச்சி.!”
 
(ஓரு வெள்ளிக்கிழமை அன்று)1391799 656538261058009 260030728 n 3 - 2025
 
(வளையல் வியாபாரியின் தலைபாரமும், மனபாரமும் போக்கிவைத்த பெரியவா)
 
கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி
தட்டச்சு; வரகூரான் நாராயணன்.
 
ஒரு நாள் வெய்யில் கடுமையாக இருந்த சமயம். பூஜையை முடித்துவிட்டு முன்பக்கத்தில் மகா பெரியவா அமர்ந்திருந்தார்.
 
அந்தச் சமயம் வெய்யலின் கொடுமையைத் தாங்காமல் வயதான ஒரு வளையல் வியாபாரி மடத்துக்குள் வந்து தன் வளையல் பெட்டியை ஒர் ஓரமாக இறக்கி வைத்துவிட்டு ஓய்ந்துபோய் உட்கார்ந்தான். அவருடைய சோர்ந்த முகம் மகானின் கண்களில் பட்டது. மடத்துஊழியர் ஒருவர் மூலமாக வியாபாரியை தன் அருகே அழைத்து வரச் செய்தார். மெதுவாக வியாபாரியை விசாரித்தார்.
 
“உனக்கு எந்த ஊர்?வளையல் வியாபாரம் எப்படி நடக்கிறது? உனக்கு எத்தனை குழந்தைகள்?” போன்ற விவரங்களைக் கேட்டார்.
 
வளையல் வியாபாரி அதே ஊரைச் சேர்ந்தவர்தான். தன்னுடன் வயதான தனது தாயாரும்,மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் தனக்கு இருக்கிறார்கள் என்றும், கடந்த ஆறு மாத காலமாக வியாபாரம் மிகவும் மந்தமாக இருப்பதால், ஜீவிப்பதே கஷ்டமாக இருக்கிறது என்றும் யதார்த்தமாகத் தன் நிலையைச் சொன்னார்.
 
அப்போது மகாப் பெரியவாள், “இந்த வளையல் வியாபாரியின் பாரத்தை இன்று நாம்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று சொன்னவர் ,அதற்கேற்ற விளக்கமும் தந்தார்.
 
“இன்று வெள்ளிக்கிழமை இவரிடம் இருக்கும் எல்லா வளையல்களையும் மொத்தமாக வாங்கி, மடத்துக்கு வரும் எல்லா சுமங்கலிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் கொடுத்தால் புண்ணியம். இந்த ஏழையிடமிருந்து வாங்கி அவர்களுக்குக் கொடுப்பது விசேஷமல்லவா? இந்தப் புண்ணிய கைங்கர்யத்துக்கு அளவு கோலே கிடையாது!” என்று சொன்னவர், ஒரு பக்தர் மூலம் வளையல்
எல்லாவற்றையும் வாங்கச் சொன்னார்.
 
பிறகு அதில் ஒரு டஜன் வளையலை எடுத்து வளையல்காரரிடமே கொடுக்கச் சொல்லுகிறார். அதற்கு காரணமும் சொல்கிறார்.
 
வெள்ளிக்கிழமையில் வளையல் பெட்டி காலியாக இருக்கவே கூடாது.அந்த வளையல்களை அவன் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகட்டும்.
 
பிறகு வளையல்காரருக்கு மடத்தின் மூலமாக வேஷ்டி, புடவைகளைக் கொடுத்து அவருக்கு சாப்பாடும் போட்டு அனுப்பும்படி மகான் உத்தரவு போட்டார்.
 
இன்னொன்றும் சொன்னார்.
 
“இன்று அவனுக்கு தலைபாரமும்,மனபாரமும் நிச்சயம் குறைந்திருக்கும் இல்லையா?”
 
தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத விதமாக உதவியைச் செய்து விடுகிறார் மகான் என்று அங்கிருந்த பக்தர்கள் போற்றிப் புகழ்ந்தனர்.
 
அன்று மடத்திற்கு வந்த அவ்வளவு சுமங்கலிப் பெண்களுக்கும் வளையல்கள் வழங்கப்பட்டன. அதுவும் மகானின் கையால் தொட்டுக் கொடுத்த வளையல்கள். அந்த பாக்கியம் எல்லோருக்கும் கொடுத்து வைத்து இருக்க வேண்டுமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories